Home /ramanathapuram /

கடல் சிப்பிகள் மூலம் வீட்டு அலங்கார பொருட்கள் உற்பத்தி.. அசத்தும் மீனவ பெண்..  

கடல் சிப்பிகள் மூலம் வீட்டு அலங்கார பொருட்கள் உற்பத்தி.. அசத்தும் மீனவ பெண்..  

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Rameshwaram : ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புயல் காப்பகம் பகுதியில் வசித்து வருபவர் மீனவ பெண்ணான சொர்னமேரி. இவர் சிப்பி, முத்து போன்ற பொருட்கள் வாங்கி வந்து அவற்றின் மூலம் வீட்டு அலங்காரப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கடலில் கிடைக்கக்கூடிய சிப்பிகள், முத்துக்களை கொண்டு வீட்டில் இருந்தபடியே சுய தொழில் செய்து  வரும் மீனவ பெண்கள், தங்களின் வாழ்க்கை தரம் மேம்பட அரசு சார்பில் சுயதொழில் பயிற்சி போன்ற உதவிகளை எதிர்பார்க்கின்றனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இருப்பினும்சூறாவளி காற்று, மழை என அடுத்தடுத்த காலநிலை மாற்றத்தால் மீனவர்கள் நலன் கருதி மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படவில்லை.

இதனால் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நேரடியாக 5000 -ற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்படைகின்றனர், மீன்பிடிக்க செல்லாததால் தினமும் 10 கோடி ரூபாய் வரையிலும் அரசிற்கு இழப்பு ஏற்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

சுயதொழிலில் வருமானம் ஈட்டும் மீனவ பெண்கள்


இந்நிலையில், இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகும் மீனவர்கள், வருமானம் இல்லாத நிலையில் தங்களின் குடும்ப தேவைகளுக்கு பணம் இல்லாமல் வட்டிக்கு பணம் வாங்கும் சூழல் ஏற்படுகிறது.

இது போன்ற நெருக்கடி காரணமாக குடும்ப பாரத்தை சுமக்கும் நோக்கில் சிப்பி, முத்துக்கள் மூலம் கைவினை கலை பொருட்கள் தயாரித்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர் மீனவ பெண்கள்.

சுயதொழிலில் வருமானம் ஈட்டும் மீனவ பெண்கள்


அந்த வகையில், ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புயல் காப்பகம் பகுதியில் வசித்து வருபவர் மீனவ பெண்ணான சொர்னமேரி, இவரின் கணவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

தங்களது குடும்பத்தை காப்பாற்ற ராமேஸ்வரத்தில் இருந்து வீட்டிற்கு சிப்பி, முத்து போன்ற பொருட்கள் வாங்கி வந்து அதை வைத்து கையாலேயே அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் தயாரித்து, அதன் மூலம் அதிகபட்சமாக மாதம் ரூ.12,000 வரையிலும் வருமானம் ஈட்டுகிறார்.

சுயதொழிலில் வருமானம் ஈட்டும் மீனவ பெண்கள்


சொர்ணமேரி போலவே அவர் வசித்து வரும் தெருவில் உள்ள 15 பெண்கள் இந்த சுயதொழில் செய்து அதன் மூலம் தங்களின் குடும்ப தேவையை பூர்த்தி செய்கின்றனர். இதனால் தன் குடும்பம் கடன் சூழலில் இருந்து தப்பிப்பதாகவும் வீட்டிலிருந்தபடியே இதை செய்ய முடிவதால் தங்களுக்கு பெரிய சிரமம் இல்லை என்றும் அவர் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதே நேரத்தில், “சிப்பி கோர்ப்பதில் பல விதவிதமான டிசைன்கள் உள்ளது, எங்களுக்கு ஓரளவு மட்டும் தான் தெரியும், அரசு எங்களுக்கு சிப்பி கோர்க்கும் பயிற்சி அளித்து மேலும் பல டிசைன்கள் உருவாக்க கற்றுக் கொடுத்தால் தங்களின் வாழ்க்கைத்தரம் மேலும் மேம்படும் எனவும். இது போன்று சுயதொழில் செய்ய மீனவ பெண்களுக்கு ஏற்பாடுகள் செய்து தந்தால் மீனவ குடும்பங்களின் வாழ்க்கை சிரமமின்றி செல்லும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி