ஹோம் /ராமநாதபுரம் /

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் : அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் ஆய்வு

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் : அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் ஆய்வு

மண்டபம் மறுவாழ்வு முகாம்;அயலகத் தமிழ் நலன் மற்றும்  மறுவாழ்வு துறை ஆணையாளர் ஆய்வ

மண்டபம் மறுவாழ்வு முகாம்;அயலகத் தமிழ் நலன் மற்றும்  மறுவாழ்வு துறை ஆணையாளர் ஆய்வ

Mandapam camp : ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்.

  இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மார்ச் 22ஆம் தமிழகம் வந்த இலங்கை பகுதியைச் சேர்ந்த 10 பேரை மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்திருந்தனர்.

  இந்நிலையில், மண்டபம் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களை சென்னையிலிருந்து வந்த அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் ஜேசிந்த லாசெர்ஸ் மண்டபம் முகாமில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மண்டபம் முகாமில் உள்ள மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சியரும் ஆய்வு மேற்கொண்டார்.

  மேலும், தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளை சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.

  அப்போது, இனிவரும் காலங்களில் வரக்கூடிய இலங்கை தமிழர்களுக்கு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  இதற்கு, தமிழக அரசு சார்பில் வரக்கூடிய நபர்களுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு இதுவரை எந்த தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசு சார்பில் முடிவுகள் எடுக்கப் பட்ட பின்னரே வரக்கூடிய நபர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து மண்டபம் முகாம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என ஜேசிந்த லாசெர்ஸ் கூறினார்.

  மேலும், தமிழக முதல்வர் இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு சுமார் 12 திட்டங்களை அறிவித்திருந்தார். இத்திட்டங்களில் 8 திட்டங்கள் முழுமையாக முகாம்களில் நடைமுறையில் இருந்து வருகிறது மீதமுள்ள நான்கு திட்டங்களும் இன்னும் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Ramanathapuram, Sri Lanka, Srilankan Refugees