Home /ramanathapuram /

ஆமை வேகத்தில் நடைபெறும் மண்டபம் துறைமுக பாலம் அமைக்கும் பணிகள்.. கவலையில் மீனவர்கள்..

ஆமை வேகத்தில் நடைபெறும் மண்டபம் துறைமுக பாலம் அமைக்கும் பணிகள்.. கவலையில் மீனவர்கள்..

மந்த

மந்த கதியில் மண்டபம் துறைமுக பாலம் அமைக்கும் பணி..

Ramanathapuram District News | மண்டபம் தெற்கு பகுதியில் புதிய துறைமுகம் அமைக்க 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.20 கோடி செலவில் புதிதாக பாலம் அமைக்க மீன்வளத்துறை சார்பில் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியானது இந்த வருடம் ஜூலை மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram | Ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு துறைமுகம் மற்றும் வடக்கு துறைமுகத்தில் ஜெட்டி பாலம் அமைக்கும் பணியானது, ஆமை வேகத்தில் மந்தமாக நடைபெறுவதால் விரைந்து அப்பணியை முடிக்க மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை மீன்பிடி  தொழிலே பிரதானமாக விளங்குகிறது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் மீன் பிடி தொழில், மற்றும் அது சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக அதிகப்படியான மீன்பிடி விசைப்படகுகளை கொண்டது மண்டபம் தான். இங்கு 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 300-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகள் மண்டபம் தெற்கு துறைமுகத்தில் நிறுத்தப்படுகின்றன. மிகச்சிறிய இந்த துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்த மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதையடுத்து, மண்டபம் தெற்கு பகுதியில் புதிய துறைமுகம் அமைக்க 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.20 கோடி செலவில் புதிதாக பாலம் அமைக்க மீன்வளத்துறை சார்பில் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியானது இந்த வருடம் ஜூலை மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிலையில், ஜூலை மாதம் முடிந்து செப்டம்பர் மாதம் வந்துவிட்ட நிலையிலும் இன்னும் பாலம் கட்டும் பணியானது முடிந்தபாடில்லை, ஒரு வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே கட்டுமான பணி நடைபெற்றதாகவும் அதன் பிறகு பணிகள் நடைபெறாததால் அங்குள்ள இரும்பு பொருட்கள் துருப்பிடித்து வீணாகியதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

துறைமுகம் கட்டுமான பணி ஆனது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்னும் இரண்டு மாதத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கவுள்ள நிலையில் புயல் காற்று வீசும் போது தங்களது படகுகள் பாதுகாப்பாக நிறுத்த விரைவில் துறைமுக பாலத்தை அமைத்து தர வேண்டும் என்று மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி