ஹோம் /ராமநாதபுரம் /

வல்லபை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் பேட்டை துள்ளலுடன் நடைபெற்ற மண்டல பூஜை

வல்லபை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் பேட்டை துள்ளலுடன் நடைபெற்ற மண்டல பூஜை

ஐயப்ப பக்தர்கள்

ஐயப்ப பக்தர்கள்

வாளாந்தரவை ரெகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட சுவாமிகள் பேட்டை துள்ளால் நிகழ்ச்சி மற்றும் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

வாளாந்தரவை ரெகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட சுவாமிகள் பங்கேற்ற பேட்டை துள்ளால் நிகழ்ச்சி மற்றும் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் அடுத்துள்ள வாளாந்தரவை ரெகுநாதபுரம் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளில் இருந்து மாலை அணிவித்து விரதம் இருந்து வந்தனர் ஐயப்ப பக்தர்கள். இந்நிலையில், இன்று மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலையில் நடை திறந்து ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதன் பின்னர் 500-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் மாரியம்மன் கோயிலில் இருந்து உடல் முழுவதிலும் வர்ணம் பூசி, நாட்டிய குதிரைகள் மற்றும் ஜென்டமேளம் ஒலிக்க பேட்டை துள்ளால் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில அளவிலான கலை திருவிழாவுக்காக புறப்பட்ட மாணவ, மாணவிகள்- வழிஅனுப்பி வைத்த ராமநாதபுரம் ஆட்சியர்

இதனைத்தொடர்ந்து, சந்தனம், பால், மஞ்சள் என 11 வகை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோவிலில் இருந்து திருத்தேரில் ஐயப்பன் எழுந்தருளி பஸ்ம குளத்தில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வல்லபை ஜயப்பனின் தரிசனம் பெற்று சென்றனர்.

செய்தியாளர்: மனோஜ் குமார், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram