ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் புத்துயிர் பெற்று வரும் மல்லர் கம்பம் விளையாட்டு.. ஆர்வத்துடன் பயிற்சி பெரும் மாணவர்கள்.. 

ராமநாதபுரத்தில் புத்துயிர் பெற்று வரும் மல்லர் கம்பம் விளையாட்டு.. ஆர்வத்துடன் பயிற்சி பெரும் மாணவர்கள்.. 

மல்லர் கம்பம் விளையாட்டு

மல்லர் கம்பம் விளையாட்டு

Mallar Kambham | மன்னர்களின் ஆட்சி காலத்தில் போர் வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் விளையாடும் விளையாட்டாக மல்லர் கம்பம் இருந்துள்ளது. இந்த விளையாட்டின் மூலம் உடலை வலுவாக்கும் உடற்பயிற்சியாக தமிழகத்தில் போர்வீரர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மல்லர் கம்பம் பயிற்சியானது அளிக்கப்படுகிறது. மேலும் இந்த விளையாட்டானது முக்கிய நிகழ்sசிகளின்போது அரங்கேற்றமும் செய்யப்படுகிறது.

அப்போது இதை பார்க்கும் சிறுவர்கள் இந்த விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டு, மல்லர் கம்பம் பயிற்சி பெற வருவதாக கூறுகின்றனர். மல்லர் கம்பம் என்பது வலுவலுப்பான 16 அடி உடைய கம்பத்தின் மீது ஏறி சாகசங்கள் செய்வதே இந்த விளையாட்டாகும்,

மன்னர்களின் ஆட்சி காலத்தில் போர் வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் விளையாடும் விளையாட்டாக மல்லர் கம்பம் இருந்துள்ளது. இந்த விளையாட்டின் மூலம் உடலை வலுவாக்கும் உடற்பயிற்சியாக தமிழகத்தில் போர்வீரர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர் .

இந்த மல்லர் கம்பம் விளையாட்டானது, தற்காப்பு கலையைப் போல் தான் மனிதனின், மனதையும், உடலையும் கட்டுப்படுத்தி வைக்க உதவும் யோகாசனம் போல் இந்த விளையாட்டும் தன்னிகரற்ற ஒன்றாகும். மனதையும், உடலையும், கட்டுக்குள் வைத்து செய்யும் உடற்பயிற்சி என்பதால் முன்னோர்கள் இந்த கலையையும் பாதுகாத்து, தன் தலைமுறைகளுக்கு சொல்லி கொடுத்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க : ராமநாதபுரத்தை பசுமையாக்க கைகோர்த்த மாணவர்கள் - சிட்கோ தொழிற்பேட்டையில் 500 மரக்கன்று நடவு

இந்த விளையாட்டை மன்னர் ஆட்சி காலத்தில் சோழர்களும், பல்லவர்களும் போற்றி பாதுகாத்ததாக கூறப்படுகிறது, முதலாம் நரசிம்ம வர்மபல்லவன் மல்லர் கம்பம் விளையாட்டிலும், மல்யுத்ததிலும் சிறந்து விளங்கியதால் "மாமல்லன்" என்று அழைத்துள்ளனர்.

"மல்"எனும் சொல்லானது "வளத்தை" குறிப்பதாக தொல்காப்பியத்தில் உள்ளது, ஆதிமனிதன் சுலபமாக மரம் ஏறி இறங்க வழிமுறைகள் கண்டறிந்து அதை விதியாக வகுத்துள்ளான், இதன் அடிப்படையில் மனிதன் போல் பெரிய கற்கள் மற்றும் மரத்தில் உருவங்கள் அமைத்து மல்யுத்தம் செய்யும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர், இதனால் இந்த விளையாட்டு மல்லர் கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் பகுதியில் உள்ள வெளிப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மல்லர் கம்பம் பயிற்சியானது பயிற்சி பெற ஆர்வம் காட்டும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இங்கு பயிற்சி பெரும் மாணவர்கள் கோவில் திருவிழாக்கள், அரசு விழாக்களில், ஏராளமான கிராமங்களுக்கு சென்று மல்லர் கம்பம் விளையாட்டைப்பற்றி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கலை பண்பாடுத்துறை, ராமநாதபுரம் மாவட்டம் ஜவகர் சிறுவர் மன்றம் திட்ட அலுவலர் லோகசுப்ரமணியன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : 50 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

2020-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் தொடங்கிய இந்த பயிற்சி மன்றாமானது 2021- ம் ஆண்டு குடியரசு தினத்தில் மல்லர் கம்பம் விளையாட்டில் பங்கு பெற்றவர்கள் சிறப்பாக செய்ததால் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த வீரராகவராவ் பரிசுகள் வழங்கி மாணவர்களை பாராட்டியுள்ளார். இந்தாண்டு மாவட்டம் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மல்லர் கயிறு ஏறும் விளையாட்டில் பெண்கள் செய்ததை பார்த்து வியந்த மாவட்ட காவல் தலைவர் மயில்வாகனம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் மாணவிகளை பாராட்டு ஊக்கப்படுத்தி உள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மல்லர் கம்பம் பயிற்சியில் பலர் கற்றுக்கொண்டுள்ளர், தற்போது, இந்த பயிற்சி பள்ளியில் 40 ஆண்களும், 25 பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். வரும் நாட்களில் அரசு விழா நிகழ்ச்சியில் மல்லர் கம்பம் மற்றும் மல்லர் கயிறு விளையாட்டுகளை நடத்த வழிவகை செய்யவேண்டும் என்று லோகசுப்ரமணியன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது உள்ள இளைஞர்கள் சிறுவர்கள் தொலைபேசியில் மூழ்கிக் கொண்டு இருப்பதால் இது போன்ற விளையாட்டுக்கள் ஆர்வம் கொண்டு மல்லர்கம்பம், சிலம்பம், கராத்தே போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு உடலையும் மனதையும் சீராக வைத்து கொள்ள மல்லர் கம்பம், இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramnad