முகப்பு /ராமநாதபுரம் /

படுகொலையான விஏஓ லூர்து பிரான்சிஸ் : ராமநாதபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மௌன அஞ்சலி பேரணி!

படுகொலையான விஏஓ லூர்து பிரான்சிஸ் : ராமநாதபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மௌன அஞ்சலி பேரணி!

X
மறைந்த

மறைந்த விஏஓ லூர்து பிரான்சிஸ்க்கு மௌன அஞ்சலி பேரணி

ராமநாதபுரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மணற்கொள்ளையற்களால் கொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ்கு மௌன அஞ்சலி பேரணியானது நடைபெற்று, புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை அஞ்சலி 

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸுக்கு மௌன அஞ்சலி பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சூசை பாண்டியாபுரத்தை சேர்ந்த லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மணல் கடத்தல் தொடர்பாக புகார் அளித்ததால் அண்மையில் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில் லூர்து பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் மௌன அஞ்சலி பேரணியானது நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் மௌன அஞ்சலி

ராமநாதபுரம் அரண்மனை முன்பாக தொடங்கிய இந்த பேரணியானது, செண்டர் ப்ளாக், வண்டிக்காரதெரு வழியாக முக்கிய பகுதிகளுக்கு சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஏஓ லூர்து பிரான்சிஸின் உருவ படத்திற்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

top videos

    இந்த பேரணியில் 300-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களும், 400-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram