முகப்பு /ராமநாதபுரம் /

மலைமேல் சாத்தார்வுடையார் அய்யனார் கோவில் சமத்துவ எருதுகட்டு விழா.. மாட்டை அடக்கிய வீரர்கள்..

மலைமேல் சாத்தார்வுடையார் அய்யனார் கோவில் சமத்துவ எருதுகட்டு விழா.. மாட்டை அடக்கிய வீரர்கள்..

X
மலைமேல்

மலைமேல் சாத்தார்வுடையார் அய்யனார் கோவில் சமத்துவ எருதுகட்டு விழா

Malaimel Satharudaiyar Ayyanar Temple Eruthu Kattu Thiruvizha 2023 : திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் ஸ்ரீமலைமேல் சாத்தார்வுடையார் அய்யனார் கோவில் 52-ம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா நடந்தது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் பழமையான ஸ்ரீ மலைமேல் சாத்தார்வுடையார் அய்யனார் கோவிலில் மாபெரும் எருதுகட்டு விழா நடைபெற்றது.

இந்த எருதுகட்டு விழாவில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாடுகள் பங்கேற்றன. இதில் திரளான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடங்கினர்.

மலைமேல் சாத்தார்வுடையார் அய்யனார் கோவில் சமத்துவ எருதுகட்டு விழா

இதில் பிடிபடாத மாடுகளுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் ரொக்கப்பணங்களும் வழங்கப்பட்டது. இந்த சமத்துவ எருதுகட்டு விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 20-ற்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram