ஹோம் /Ramanathapuram /

மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு

மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிப்பு

மதுரை - ராமேஸ்வரம் இடையிலான முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மதுரை - ராமேஸ்வரம் இடையிலான முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில்கள் நாளை (18.11.2021) முதல் வாலாந்தரவை மற்றும் மண்டபம் கேம்ப் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  அதன்படி, வண்டி எண் 06655 மதுரை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் வாலாந்தரவை மற்றும் மண்டபம் கேம்ப் ரயில் நிலையங்களிலிருந்து முறையே இரவு 08.20 மற்றும் 08.43 மணிக்கு புறப்படும்.

  வண்டி எண் 06654 ராமேஸ்வரம் - மதுரை முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயில் மண்டபம் கேம்ப் மற்றும் வாலந்தரவை ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 06.15 மற்றும் 06.35 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Railway