ஹோம் /ராமநாதபுரம் /

பகலிலேயே ‘தண்ணி’ய போட்டு சலம்பும் யாசகம் பெறும் மதுபிரியர்கள்.. ராமநாதசுவாமி கோவில் அருகே அட்ராசிட்டி..!

பகலிலேயே ‘தண்ணி’ய போட்டு சலம்பும் யாசகம் பெறும் மதுபிரியர்கள்.. ராமநாதசுவாமி கோவில் அருகே அட்ராசிட்டி..!

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Rameshwaram Temple | ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் கிழக்கு ரதவீதியில் உள்ள பழைய தீர்த்த டிக்கெட் கொடுக்கும் இடத்தில் தங்கி இருந்து யாசகம் பெறுபவர்கள், பகல் நேரத்தில் மது அருந்திவிட்டு பக்தர்களுக்கு இடையூறாக அச்சுறுத்தும் வகையில் உள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் கிழக்கு ரதவீதியில் உள்ள பழைய தீரத்த டிக்கெட் கொடுக்கும் இடத்தில் தங்கி இருந்து யாசகம் செய்பவர்கள், பகல் நேரத்தில் மது அருந்திவிட்டு பக்தர்களுக்கு இடையூறாக அச்சுறுத்தும் வகையில் உள்ளனர். இவர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோவில் நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி பின்பு, கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி விட்டு, பின்பு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் அங்குள்ள யாசகம் பெறுபவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து செல்கின்றனர். யாசகம் பெறுபவர்கள் காலையில் இருந்து மதியம் வரை யாசகம் பெற்றுவிட்டு மதியம் ஆனதும் கள்ளமது விற்பனை செய்யப்பவர்களை தொடர்பு கொண்டு அல்லது பாம்பன் மதுகடைகளுக்கு சென்று மது வாங்கி அருந்திவிட்டு குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு பக்தர்களுக்கு இடையூறாக அச்சுறுத்தும் வகையில் உள்ளனர்.

Also read: தனுஷ்கோடிக்கு சுற்றுலா போறீங்களா..! மறக்காம இதை எல்லாம் பார்த்துட்டு வாங்க..!

இதன் அருகிலேயே திருக்கோவிலுக்கு சொந்தமான முதலுதவி மையம் உள்ளது. அங்கு குடித்துவிட்டு யாசகர்கள் ரகளையில் ஈடுபடுவதால் முதலுதவி மையத்திற்கு சிகிச்சைக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கடந்த ஆண்டு கூட இங்கே யாசகர்கள் மது அருந்தி ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு இரண்டு நபர்கள் இறந்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் ஏழை, எளிய மக்கள் ஊரில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அருந்த இடமில்லாமல் மரத்தடியிலும், கோவில் நிர்வாக அலுவலகத்தின் எதிரேவும் உண்ணுகின்றனர். அப்போது காகங்களின் எச்சில் உணவுகளில் விழுவதால் உணவுகள் வீணாகி உண்ண முடியாமல் போவதால் மன வேதனை அடைகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நகராட்சி நிர்வாகம் சார்பில் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் பின்புறம் யாசகர்களுக்கு மூன்று வேலை உணவு, அடிப்படை வசதிகள் அனைத்தும் உடைய தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது, இந்த தங்கும் விடுதியில் இவர்களை தங்கவைக்க வேண்டும் என்றும், யாசகர்கள் தங்கி இருக்கும் இடத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் பக்தர்கள் உணவருந்துவதற்கு ஏற்ற இடமாக வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram