முகப்பு /ராமநாதபுரம் /

மின்கம்பி உரசியதில் தீக்கிரையான கரும்பு தோட்டம்.. துடிதுடித்த விவசாயிகள்!

மின்கம்பி உரசியதில் தீக்கிரையான கரும்பு தோட்டம்.. துடிதுடித்த விவசாயிகள்!

X
தீக்கிரையான

தீக்கிரையான கரும்பு தோட்டம்

Ramanathapuram | பரமக்குடி அடுத்த வெங்காளூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கரும்பு தோட்டத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 20-ஏக்கர் கரும்பு தோட்டம் கருகி தீக்கரையானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram | Paramakudi | Ramanathapuram

பரமக்குடி அடுத்த வெங்காளூர் கிராமத்தில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கரும்பு தோட்டத்தில் உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 20-ஏக்கர் கரும்பு தோட்டம் கருகி தீக்கரையானது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வெங்காளூர் கிராமத்தில் பருத்தி, நெல், கரும்பு, ஆகியவை விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு விளைநிலங்களை உரசும்படி மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.

இந்நிலையில், இன்று திடீரென மின்கம்பிகள் கரும்பு இலைகளில் உரசி ஏற்பட்ட தீ விபத்தில் பூமி, கருப்பையா, சந்திரன், என பத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் சுமார் 20-ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் கருகி தீக்கரைக்கு இரையானது. இதையடுத்து, பரமக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

மேலும், விளைநிலங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படைவதால் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை அகற்றி எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்கம்பிகள் உயர்த்தி செல்லுமாறு அமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

First published:

Tags: Agriculture, Local News, Paramakudi Constituency, Ramanathapuram