ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடியில் இளைஞர் திறன் திருவிழா - தேர்வானவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா!

பரமக்குடியில் இளைஞர் திறன் திருவிழா - தேர்வானவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா!

பரமக்குடியில் இளைஞர் திறன் திருவிழா

பரமக்குடியில் இளைஞர் திறன் திருவிழா

Ramanathapuram District News : பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியன் அலுவலகத்தில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.

இந்த இளைஞர் திறன் திருவிழா படித்தும் வேலைவாய்ப்பற்று இருக்கும் இளைஞர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி ஏற்படுத்தி தரும் பொருட்டு நடத்தப்பட்டது. அரசு நடத்திய மாபெரும் இளைஞர் திறன் பயிற்சி தேர்வு முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : பரமக்குடி அருகே சாலை துண்டிப்பு... 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் கிராம மக்கள்... 

இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு டி.டி.பி ஆபரேட்டர், வெல்டர், சில்லறை வணிகம், டெக்ஸ்டைல் பயிற்சி, நர்சிங், மொபைல் போன் சர்வீஸ், தையல், அழகுகலை, சிசிடிவி கேமரா பொருத்துதல் போன்ற இலவச வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்வில், பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அனைத்து ஊராட்சிகளை சார்ந்த திறன் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramnad