ஹோம் /ராமநாதபுரம் /

நிலுவை வழக்குகளைத் தீர்க்கலாம்: ராமநாதபுரத்தில் நாளை லோக் அதாலெத்

நிலுவை வழக்குகளைத் தீர்க்கலாம்: ராமநாதபுரத்தில் நாளை லோக் அதாலெத்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, சொத்து மற்றும் பணம் சம்மந்தப்பட்ட வழக்கு, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்வி கடன், வங்கி கடன், குடும்ப வன்முறை வழக்கு, காசோலை, நுகர்வோர் வழக்கு உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகம் உள்ளிட்ட இடங்களில் நாளை லோக்அதாலெத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடக்கிறது. சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் இது நடைபெறுகிறது.

  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரச்னைகளை விரைவாக தீர்க்கவும், வழக்குகளை விரைந்து முடிக்கவும் இது வழி வகை செய்கிறது.

  இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, சொத்து மற்றும் பணம் சம்மந்தப்பட்ட வழக்கு, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்வி கடன், வங்கி கடன், குடும்ப வன்முறை வழக்கு, காசோலை, நுகர்வோர் வழக்கு உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

  இதை பொது மக்கள் பயன்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காணலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை

  மாவட்ட நீதிபதியுமான ஜி. விஜயா தெரிவித்துள்ளார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Ramanathapuram