Home /ramanathapuram /

ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரிய சைஸ் கணவாய் மீன்கள்..

ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரிய சைஸ் கணவாய் மீன்கள்..

கணவாய்

கணவாய் மீன்கள்..

Pamban Squid Fishes : பாம்பனில் கிடைக்கும் இந்த வகை கணவாய் மீன்கள், உணவிற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது, உள்ளூரில் இதற்கு பெரும் கிராக்கி உள்ளது, இதை காயவைத்து கருவாடாகவும்‌ உண்கின்றனர். இதற்கு ஊசி கணவாய் என்று மற்றொரு பெயரும் உண்டு.

மேலும் படிக்கவும் ...
பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரிய சைஸ் டியூப் கணவாய் மீன்கள் அதிக அளவில் வலையில் சிக்கியுள்ளன.

ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 190-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க சென்றனர்.

இதையடுத்து, மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கும் பொழுது பெரிய அளவிலான அதாவது இரண்டில் இருந்து 3 அடி வரையிலும் இருக்கக்கூடிய டியூப் கணவாய் மீன்கள் அதிகளவில் சிக்கியுள்ளன.

கணவாய் மீன்கள்..


கணவாய் மீனின் சிறப்புகள்:-

டியூப் கனவாய் மீன்கள்  வருடத்தின் அனைத்து மாதங்களிலும் கிடைக்கின்றது. அதிகளவு கிடைப்பது என்பது ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே, காற்றின்திசை மற்றும் வேகம் மாறுதலுக்கு ஏற்ப வலையில் பிடிபடுகிறது.

கணவாய் மீன்கள்..


ஒரு கணவாய் மீன் எடை சுமார் 2 கிலோ வரையிலும் இருக்கக்கூடும் விலையை பொருத்தளவில் ஒரு கிலோ 300 லிருந்து 350 ரூபாய் வரையிலான விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் கூடுதல் விலைக்கு அனுப்பப்படுகிறது.

பாம்பனில் இருந்து  தூத்துக்குடி மற்றும் கொச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலமாக ஜரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கணவாய் மீன்கள்..


இந்த வகை கணவாய், உணவிற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது, உள்ளூரில் இதற்கு பெரும் கிராக்கி உள்ளது, இதை காயவைத்து கருவாடாகவும்‌ உண்கின்றனர். இதற்கு ஊசி கணவாய் என்று மற்றொரு பெயரும் உண்டு.

கணவாய் மீன்கள்..


வெள்ளை நிறத்தில் பளபளவென இளநீரில் இருக்கும் தேங்காய் போன்று அமைப்பை உடையது, தன்னை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க கருப்பு நிறத்தில் திரவம் போன்று வெளியிட்டு தன்னை உண்ணவிற்காக வேட்டையாடும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரை நீந்தி செல்லும் தன்மையுடையது, இதன் பயன்கள் என்னவென்றால் ஒமேகா-3 ஊட்டச்சத்து இருப்பதால் உடலின் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும், நீரழிவு நோயினால் ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.

 
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி