ஹோம் /ராமநாதபுரம் /

தை அமாவாசை திதி - ராமேஸ்வரத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்

தை அமாவாசை திதி - ராமேஸ்வரத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்

X
ராமேஸ்வரத்தில்

ராமேஸ்வரத்தில் பக்தர்கள்

Ramanathapuram | தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டுசுவாமி தரிசனம் செய்யஅக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் பக்தர்கள் குவிந்தனர்.

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதேஅமாவாசை திதி ஆகும்.வருடத்தில் முதலில் வரும் தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்கள் மிகவும் முக்கியமானதாகும், புரட்டாசி மஹாளய அமாவாசை, பிறகு மாதாந்திர அமாவாசை நாட்கள் திதி, தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்தநாள். எனவே, ராமேஸ்வரத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால்நன்மைகள் ஏற்படும். முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும் என நம்பப்படுகிறது.

தெப்பனம் கொடுக்கும் நபர் 

இந்நிலையில், இன்று தை அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று முதலேவருகை தர தொடங்கினர்.

ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்

இன்று காலை பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு, தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து, திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, ராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடியும் மற்றும் ராமநாதசுவாமி, ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மனை பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து, எந்தவொரு சிரமமும் இன்றிசுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் புனித தீர்த்தங்களில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது,

பக்தர்கள் கூடும் இடங்களில் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை கண்காணிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் | 1000 ஏக்கர் பருத்தி இலைகருகல் நோயால் பாதிப்பு- இழப்பீடு கோரி விவசாயிகள் முறையீடு

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram