முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் பேருந்து பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகும் பயணிகள்... 3 கிமீ தூரம் நடந்து செல்லும் அவலநிலை

ராமேஸ்வரத்தில் பேருந்து பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகும் பயணிகள்... 3 கிமீ தூரம் நடந்து செல்லும் அவலநிலை

X
பேருந்து

பேருந்து பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகும் பயணிகள்... மூன்று கிலோமீட்டர் தூரம் நட

Ramanathapuram News | ராமேஸ்வரம் நகராட்சியில் செயல்பட்ட பேருந்துகள் அனைத்தும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rameswaram, India

ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், தீவு பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாததால் இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பேருந்து பற்றாக்குறையைப் போக்கி போதிய பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையானது மண்டபம் வரையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் நகராட்சியில் செயல்பட்ட பேருந்துகள் அனைத்தும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதனால் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இயங்கக்கூடிய டவுன் பஸ், ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டதால் பேருந்து பற்றாக்குறை நிலவிவருகிறது. இதனால் பேருந்துகளில் வரும் சுற்றுலா பயணிகள் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து வரும் நிலை உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், பள்ளி செல்லும் நேரங்கள், பள்ளி முடிந்து வரும் நேரங்களில் சில சமயம் பேருந்து பற்றாக்குறையாலும், பேருந்து வராததாலும் மாணவர்கள் மாணவிகள் வீட்டிற்கு நடந்தே செல்லும் நிலை உருவாகிறது. வேலைக்கு செல்லும் பெண்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்து கழகமும் நடவடிக்கை எடுத்து ரயில்கள் ராமேஸ்வரத்தில் இருந்து இயங்கும் வரையில் பேருந்து பற்றாக்குறையை சரிசெய்து போதிய பேருந்து வசதியை ஏற்படுத்ததர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

First published:

Tags: Local News, Rameshwaram