கும்பாபிஷேகத்தின்போது பொதுவாக யாகங்கள் செய்யப்பட்ட தீர்த்தங்களால் தெய்வத்தின் மீதும், கோபுரக் கலசங்கள் மீதும் புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கோபுரதின் மீதி தெளிக்கப்படும் புனிதநீர் உடலில் படுவது புன்னியம் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.
கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால், முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசி கிட்டும் என்றும், ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட வனசங்கரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது.
முன்னதாக, அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, மகா கணபதி ஹோமம் போன்றவை நடத்தப்பட்டுள்ளன. இன்று யாகசாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறன. அதனைத் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) கால யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் எடுத்து வரப்பட்டு காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் ராமநாதபுரம் சொக்கநாதர் ஆலய பரம்பரை ஸ்தானிகர் மனோகர சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிபிரம்ம கிருஷ்ண ராஜேசுவரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் திவான்பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் கிரிதரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
Must Read : பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!
இந்நிலையில், இத்ந வனசங்கரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram, Temple