ஹோம் /ராமநாதபுரம் /

செருப்பு போன்று இருக்கும் சுவை மிகுந்த கிளாத்தி மீன் சீசன் துவக்கம்..

செருப்பு போன்று இருக்கும் சுவை மிகுந்த கிளாத்தி மீன் சீசன் துவக்கம்..

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Kilathi Fish : கிளாத்தி மீனின் சீசன் ஜூலை மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரை உள்ளது. அதிகளவில் செருப்பு மீன் எனப்படும் கிளாத்தி மீன்கள் சிக்குவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்பிய னவர்கள் பிடிக்கப்பட்ட மீன்களை ஏற்றுமதி செய்ய‌ கூடையில் வைத்து எடை பார்பதற்கு அடுக்கி வைத்தனர். அப்போது ஒரு டன் கிலோ வரை செருப்பு மீன் என்று அழைக்க கூடிய கிளாத்தி மீன்‌ இருந்தது.

கிளாத்தி மீன்

இந்த மீனை பற்றி மீனவர்கள் கூறியதாவது :-

மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் மட்டுமே வாழும், பார்பதற்கு செருப்பு போன்ற உடலமைப்பும் செருப்பு போன்ற கடினமான தோலமைப்பு கொண்டு உள்ளதால் இந்த கிளாத்தி மீனை, செருப்பு மீன் என்று அழைக்கின்றனர்.

கிளாத்தி மீன்

இதன் சுவை,  சீலா மீன்களை போலவே இருக்கும், இங்கிருந்து கேரளா மற்றும் தூத்துக்குடி அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அரபு மற்றும் ஜரோப்பிய நாடுகளுக்கு கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் செல்கிறது.

கிளாத்தி மீன்

இந்த மீனின் சீசன் ஜூலை மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் இறுதி வரை உள்ளது.  சீசன் காலத்தில்  ஒரு படகிற்கு 2,000 கிலோ முதல் 3,000 கிலோ வரையில் கிடைக்கும் என்று மீனவர்கள் மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.

கிளாத்தி மீன்

இந்த மீனில் ஒமேகா-3 ஊட்டச்சத்து நிறைந்துள்ளது, உள்ளுர் மக்கள் அதிகளவில் வாங்கி உண்கின்றனர், உணவகங்களிலும் பெரிய கிராக்கி உள்ளது. ஒரு மீன் இரண்டு கிலோ வரையிலும் இருக்கும், ஒரு கிலோ ரூ.170 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram