முகப்பு /ராமநாதபுரம் /

கீழக்கரையில் டீக்கடைக்குள் புகுந்த கார்.. போதையில் செய்த அட்டூழியத்தால் பறிபோன உயிர்!

கீழக்கரையில் டீக்கடைக்குள் புகுந்த கார்.. போதையில் செய்த அட்டூழியத்தால் பறிபோன உயிர்!

X
விபத்துக்குள்ளான

விபத்துக்குள்ளான கார்

Keelakarai accident death | கீழக்கரையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் கடைக்குள் புகுந்த காரை போலீசார் ஜேசிபி உதவியுடன் மீட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடைக்குள் கட்டுப்பாட்டை இழந்து‌ புகுந்த சொகுசு கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு, இருவர் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கீழக்கரையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நாராயணன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். காலை நேரத்தில் டீக்கடையில் ஏராளமானோர் டீக்குடித்து கொண்டிருந்த நேரத்தில் அந்த வழியாக கார் ஒன்று வந்துள்ளது. இந்த காரை சேலம் மாவட்டத்தை சேர்ந்த நபர் மதுபோதையில் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், போதையில் இருந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தெற்கு வேளானுர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், ஜேசிபி உதவியுடன் கடைக்குள் புகுந்த காரை வெளியே எடுத்தனர். விசாரணையில் இந்த கார் சேலத்தை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

First published:

Tags: Accident, Death, Local News, Ramanathapuram