கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு இந்தியாவிலிருந்து ராமேஸ்வரம் வழியாக 60 விசைப்படகில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகின்ற பத்தாம் தேதிக்குள் சமர்ப்பிக்க பங்குதந்தை வேண்டுகோள்
இந்தியா, இலங்கை நாடுகளின் பொதுவான கொண்டாட்டமான கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் இரண்டு மற்றும் மூன்றாம் தேதியில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவின் சார்பாக 3,500 பேரும், இலங்கை சார்பாக 4,500 பக்தர்களும் கலந்து கொள்ளலாம் என இலங்கை அரசு தகவல் வெளியிட்டிருந்தது.
கடந்த ஆண்டு கொரோனா எச்சரிக்கையால் இந்தியாவில் இருந்து 100-நபர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. தற்போது 3,500 பேர் வரை செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் செல்வதற்கு இந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் இருந்து அறுபது விசைப்படகுகளில் திருப்பயணம் செல்ல உள்ளனர். இந்தியாவிலிருந்து தோராயமாக மூவாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்கு தந்தை தேவசகாயம் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு செல்வதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வேர்க்கோடு கச்சத்தீவு திருப்பயன அலுவலகத்தில் வழங்கப்படும். இதில் படகு மற்றும் நிர்வாக கட்டணத் தொகை என ஒரு நபருக்கு ரூ.2000 கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் வீடுகளுக்கு நடுவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் -அச்சத்தில் வாழும் பொதுமக்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram