வருடத்திற்கு ஒரு முறை வரும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவினை கொண்டாடவும், கச்சத்தீவிற்கு சென்று அந்தோணியாரை கண்டு நேர்த்திக்கடன் செலுத்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
கச்சத்தீவு திருவிழாவை இலங்கை மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை இணைந்து கொண்டாடி வருகின்றனர். இந்த திருவிழா பிப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இதனைக்காண வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பாளர்கள்.
ராமேஸ்வரத்திலிருந்து பயண தூரம்:
கச்சத்தீவானது ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவிலிருந்து 8 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு செல்ல ராமேஸ்வரத்திலிருந்து இரண்டரை மணி நேரமும், இலங்கையின் தலைமன்னாரிலிருந்து ஒன்றரை மணி நேரம் ஆகும்.
மீனவர்கள் வழிபடும் அந்தோணியார்:
மீன்பிடிக்கும் போது நஷ்டம் ஏற்படாமல் லாபம் ஏற்படும் வகையில் வரத்து கிடைப்பதற்கும், 1800-ம் ஆண்டுகளில் அப்பகுதி மீன்பிடிக்கும் இருநாட்டு மீனவர்களையும், இயற்கைச் பேரிடர்கள், சுனாமி, புயலில் இருந்து காப்பாற்றவும், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாரை பிராத்தனை வழிபாடு செய்து பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கமாக மீனவர்கள் வைத்துள்ளனர்,
ஆலயத்தின் வரலாறு:
1913ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் தேவாலயம் நிறுவப்பட்டது. பின்பு காலப்போக்கில் இலங்கை அரசால் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டு இருநாட்டு உதவியுடன் 2016-ம்ஆண்டு டிசம்பரில் புதிய ஆலயமானது திறக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர்கள், கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக 90-க்கும் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே இலங்கை அரசால் அனுமதிக்கப்பட்டனர்.
கச்சத்தீவு திருவிழா:
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு திருவிழாவிழா மார்ச் மாதம் 3, 4-ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலிருந்து 3, 500 பக்தர்களும், இலங்கையிலிருந்து 4,500 பக்தர்கள் என மொத்தம் 8,000 நபர்கள் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் இலங்கை அரசு அறிவித்தது.
இந்த திருவிழாவிற்கு செல்ல ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் ஆவலுடன் உள்ளனர். ஏனென்றால் மீனவர்களை காக்கும் அந்தோனியாரை வணங்கவும் நேர்த்திக்கடன் செலுத்தவும், இலங்கை தொப்புள்கொடி உறவு மீனவர்களை சந்திக்கவும் ஆவலுடன் உள்ளனர்.
திருவிழா நிகழ்ச்சிகள்:
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் அனைத்து பக்தர்களும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காலை நேரத்தில் புறப்பட்டு மதியம் அங்கு சென்று விடுவர் இரு நாட்டு பக்தர்கள் வந்து பிறகு குறிப்பிடப்பட்ட நேரத்தில் கொடியேற்றம் தொடங்கும்.
கொடியேற்றத்திற்கு பின் திருப்பலிகள், திருச்சிலுவை ஆராதனைகள், சிலுவைப் பாதை நிகழ்ச்சிகள் நடைபெறும், பின்பு இரவு முழுவதும் திருப்பலிகள் நடைபெறுவதை பக்தர்கள் கண்டுகளித்து கொண்டாடுவார்கள். இதனைத்தொடரந்து தொடர்ந்து இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெறும்,
இதனைத் தொடர்ந்து, அதிகாலையில் இருநாட்டின் பாதிரியார்களும் பங்கேற்கும் சிறப்பு திருப்பலியும் நடைபெறும், திருப்பலிக்கு பிறகு கொடியிரக்கப்பட்டு திருவிழாவானது நிறைவு பெரும்.
களைகட்டும் கடை வியாபாரம்:
இதன்பிறகு அங்கு சென்று வந்ததன் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள இலங்கை பொருட்கள் அங்காடிகள் நமக்கு தேவையான பொருட்கள் வாங்கிகொள்வார்களாம். அதன் பிறகு விசைப்படகில் ஏறி அவர் அவர் பகுதிகளுக்கு செல்வார்கள். இந்த கொண்டாட்டத்திற்கு காத்திருக்கிறோம் என்று பக்தர்களும், மீனவர்களும் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram