ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் கோயில் வாசலில் சிவபெருமான் திரிபுரா சூரனை வதம் செய்யும் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்வு.. ஆர்வத்துடன் ரசித்த பக்தர்கள்..

ராமேஸ்வரம் கோயில் வாசலில் சிவபெருமான் திரிபுரா சூரனை வதம் செய்யும் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்வு.. ஆர்வத்துடன் ரசித்த பக்தர்கள்..

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathpuram District News : ராமநாதசுவாமி திருக்கோயில் கிழக்கு கோபுர வாசலில் கார்த்திகை பௌர்ணமி முன்னிட்டு சிவபெருமான் திரிபுரா சூரனை வதம் செய்யும் நிகழ்வானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதசுவாமி திருக்கோயில் கிழக்கு கோபுர வாசலில் கார்த்திகை பௌர்ணமி முன்னிட்டு சிவபெருமான் திரிபுரா சூரனை வதம் செய்து அரோகரா அரோகரா முழக்கத்துடன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வானது வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு சுவாமி அம்பாள் தரிசனம் பெற்று சென்றனர்.

கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு சிவதலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்புறத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் இரண்டு பக்கங்களிலும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டது.

இதையடுத்து, நுழைவாயில் பகுதியில் தீப விளக்குகளால் சிவலிங்கம் மற்றும் அம்மன் சன்னதி வெளியேறும் பகுதியில் தீப விளக்குகளால் தாமரை போன்றும் அமைக்கப்பட்டது. திருக்கோயிலுக்குள் இருந்து சுவாமி–அம்பாள் பிரியாவிடை பெற்று விநாயகர், முருகன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதையும் படிங்க : இளைஞரை கொலை செய்ய நீதிமன்றத்தில் காத்திருந்த கும்பல் - பயங்கர ஆயுதங்களுடன் 7பேர் கைது

 இதையடுத்து, சுவாமி அம்பாள் கிழக்கு கோபுர வாசலுக்கு கொண்டு வரப்பட்டு‌ இதன்முன் அமைக்கப்பட்ட சன்னதியில் இருந்து தீபம் சொக்கப்பனைக்கு கொண்டுவரப்பட்டு பூஜை செய்யப்பட்டு பின்பு திரிபுரா சூரனை பனைமரைத்திற்குள் ஒழிந்து கொண்டிருப்பதை கண்ட சிவபெருமான் மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் பனை மரத்திற்கு ஒளிந்திருந்த திரிபுரா சூரனை தீவைத்து எரிக்க செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது.

இறுதியாக கோயில் குருக்கள் அம்பாளிடம் இருந்து தீபத்துடன் சென்று இரண்டு பனைமரத்திற்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் பொதுமக்கள் வெளியூர் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி–அம்பாள் தரிசனம் பெற்று சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Karthigai Deepam, Local News, Ramanathapuram