முகப்பு /ராமநாதபுரம் /

பொதுமக்களின் தாகம் தீர்க்கும் கமுதி போலீசார்..

பொதுமக்களின் தாகம் தீர்க்கும் கமுதி போலீசார்..

X
தாகத்தினை

தாகத்தினை தீர்க்கும் காவல்துறையினர் 

Ramanathapuram summer | சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்க கமுதி காவல்துறையின் சார்பில் இரண்டு மாதங்களாக நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவும், சாலையில் அனல்காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

கோடை வெயிலின் தாக்கத்தில் சிரமப்படும் பொதுமக்கள் தாகத்தை தீர்க்க ஆங்காங்கே சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மூலமாக சாலைகளில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கமுதி பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தின் சார்பில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இரண்டு மாதத்திற்கு குளிர்ச்சியான நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மோர், குளிர்ச்சியான பழங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ALSO READ | திடீரென கடல் உள்வாங்குவது ஏன்? - விவரிக்கும் ராமேஸ்வரம் மீனவர்..

கோடைவெயிலின் தாக்கத்தில் பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் கமுதி புறநகர் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகளின் செயல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram, Summer