முகப்பு /ராமநாதபுரம் /

கமுதி ஆனையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - அம்மனின் ஆசிபெற்று சென்ற பக்தர்கள்

கமுதி ஆனையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - அம்மனின் ஆசிபெற்று சென்ற பக்தர்கள்

X
கோவில்

கோவில் கும்பாபிஷேகம்

Kamuthi Anaiyur Angala Parameshwari Amman Temple | கமுதி வட்டம் ஆனையூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்று சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் உள்ள ஆனையூர் கிராமத்தில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். இக்கோவிலில் கடந்த ஜனவரி 27-ம் தேதி அன்று கோவிலுக்கு காப்பு கட்டப்பட்டு , கும்பாபிஷேகம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில், நான்காம் கால பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூரணகுதி மங்கள இசை வாத்தியங்கள், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதையடுத்து, புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், விபூதி, சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதணை காண்பிக்கப்பட்டது.

தைப்பூச தெப்ப திருவிழா... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தீர்த்த கிணறுகளில் 5ம் தேதி நீராட அனுமதி இல்லை

இந்த கும்பாபிஷேக விழாவில் கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சாத்தூர், முதுகுளத்தூர், கடலாடி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram