முகப்பு /ராமநாதபுரம் /

பம்மனேந்தல் குருநாதசுவாமி ஆலயத்தின் சித்திரை திருவிழா.. விநோத வேடத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பம்மனேந்தல் குருநாதசுவாமி ஆலயத்தின் சித்திரை திருவிழா.. விநோத வேடத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!

X
கமுதியில்

கமுதியில் சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன்

Kamudhi gurunathaswamy temple | கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தின் குருநாதசுவாமி ஆலயத்தின் 47-ம் ஆண்டு சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Kamuthi, India

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தின் ஸ்ரீ குருநாதசுவாமி ஆலயத்தின் 47-ம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து அலகு குத்தி, சேத்தாண்டி வேடம் அணிந்து ஏராளமான பக்தர்கள்  நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமத்தில் ஸ்ரீ குருநாதசுவாமி, ஸ்ரீ பெரிய நாச்சி அம்மன் ஆலயமானது அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது விமர்சியாக நடைபெறும்.

இந்நிலையில், இந்தாண்டுகான 47-வது சித்திரை திருவிழாவானது கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் மூலவருக்கும், கோவிலைச் சுற்றியுள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்று வந்ததது.

இதையடுத்து, இன்று பம்மனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தும், பக்தர்கள் அலகு குத்தியும், சேத்தாண்டி வேடம் அணிந்தும் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக வந்து சிறுசிறு அம்மன் கோயில்களுக்கு சென்று, இறுதியாக பெரியநாச்சி அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இதையும் படிங்க | வறட்சி நிவாரணம் வழங்ககோரி ராமநாதபுரத்தில் விவசாயிகள் சாலை மறியல்

இந்த சித்திரை திருவிழாவில் கமுதி, ராமநாதபுரம் சுற்று வட்டார பகுதிகள், விருதுநகர், சிவகங்கை, மதுரை, ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்க்கு மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram, Temple