முகப்பு /ராமநாதபுரம் /

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்திருவிழா.. 2 ஆண்டுக்கு பிறகு உற்சாகத்துடன் செல்லும் பக்தர்கள்!

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்திருவிழா.. 2 ஆண்டுக்கு பிறகு உற்சாகத்துடன் செல்லும் பக்தர்கள்!

X
கச்சத்தீவு

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்திருவிழா

Katchatheevu festival 2023 | கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (மார்ச் 3 - வெள்ளிக்கிழமை) தொடங்கி நாளை சனிக்கிழமை மதியம் வரை 2 நாட்கள் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றப்பட்டு தொடங்க உள்ள நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடன் பக்தர்கள்புறப்பட்டு சென்றனர்.

இந்தியாவிற்கும் - இலங்கைக்கும் இடையே அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ திருவிழாவானது இருநாட்டு பக்தர்கள் பங்கேற்புடன்நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (மார்ச் 3 - வெள்ளிக்கிழமை) தொடங்கி நாளை சனிக்கிழமை மதியம் வரை 2 நாட்கள் நடைபெறுகிறது.

கொடியேற்றம் - தேர்பவனி :

இந்தியா - இலங்கை பக்தர்கள் ஒன்றினைந்து பாரம்பரியமாக வழிபாடு நடத்தி வரும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை‌ காலை தேர்வனியுடன் முடிவடைகிறது.

இதையும் படிங்க : 6 மணி நேரத்தில் அதிரவைத்த 2 கொலைகள், 1 துப்பாக்கிச்சூடு.. திண்டுக்கல்லில் பயங்கரம்!

2,408 பக்தர்கள் :

கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் இருந்து இன்று காலை 60 விசைப்படகுகள், 12 நாட்டுப்படகுகளில் ஒரு படகிற்கு 25 நபர்கள் என மொத்தம்- 2,408 பக்தர்கள் கலந்து கொள்ள செல்கின்றனர். இந்நிலையில், காவல்துறையினர் மற்றும் சுங்கத்துறை பிரிவு கடலோர காவல் குழுமம் காவல்துறையினர் தீவிர சோதனைக்கு பின்னர் ஒவ்வொரு படகாக வரிசை எண் அடிப்படையில் கச்சத்தீவை நோக்கி புறப்பட்டு செல்ல அனுமதித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பல வருடங்களாக சென்ற பக்தர்கள் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் செல்ல இயலாது சூழல் ஏற்பட்டது. தற்போது, எந்தவொரு இடையூறும் இன்றி செல்வதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலுடன் செல்கின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram