ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டான சல்லிமலைப்பகுதியில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மேய்க்கும் பகுதியாக இருந்துள்ளது. அப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது, தண்ணீர் குடிக்க முன்னோர்களால் குளம் தோண்டப்பட்டு தற்போது வரை அந்தகுளமானது கால்நடைகளின் தாகம் தீர்க்கும் குளமாக இருந்து வருகிறது.
இந்த குளத்தில் தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை பூங்கா அமைக்கப்பட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், இப்பகுதி பள்ளமான பகுதி என்பதால் சல்லிமலை, பாரதிநகர், மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மழை பொழியும் போது மழைநீரானது அந்த குளத்தில் தேங்கும். அந்த குளத்தின் பூங்கா அமைத்தால் தண்ணீர் தேங்க இடமின்றி சாலையில் குளமாக தேங்கிவிடும் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.
இதையும் படிங்க : ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பால் திடீரென உயிரிழந்த பன்றிகள்.. ராசிபுரத்தில் பரபரப்பு..
இதுமட்டுமின்றி, இந்த குளம் இருப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருக்கிறது. கிணறுகளை தோண்டினால் மற்ற பகுதிகளை விட குறைந்த ஆழத்திலேயே தண்ணீர் வந்துவிடும். இப்படிப்பட்ட சூழலில் உச்சநீதிமன்றமும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அகற்றி விட்டு எந்தவொரு நடவடிக்கையும் திட்டமும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குளத்தில் நடைபாதை பூங்காவானது அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் தனிபிரிவிற்கு மனுவும், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவும் அளித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், பூங்கா அமைப்பதற்கு பதிலாக அந்த குளத்தினை தூர்வாரி, படிக்கட்டுகள் மற்றும் தடுப்புசுவர் அமைத்து பொதுமக்கள் பயன்படுத்தவும், கால்நடைகளுக்கு உதவும் வகையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram