Home /ramanathapuram /

ராமேஸ்வரத்தின் ஒரு ரகசிய 'புண்ணிய ஸ்தலம்’.. ஜடாயு தீர்த்தம் செல்ல ஆர்வம் காட்டாத பக்தர்கள்.. காரணம் இது தான்..

ராமேஸ்வரத்தின் ஒரு ரகசிய 'புண்ணிய ஸ்தலம்’.. ஜடாயு தீர்த்தம் செல்ல ஆர்வம் காட்டாத பக்தர்கள்.. காரணம் இது தான்..

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அருகேயுள்ள ஜடாயு தீர்த்தம்

Jadayu Theertham: ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ள ஜடாயு தீர்த்தத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஜடாயு தீர்த்தம். ராமநாதசுவாமி திருக்கோயிலுடன் பாத்தியப்பட்ட கோயிலாக பல நூற்றாண்டுகளாக வில்வம், புண்ணைமரங்களால் அடர்ந்த வனத்தில் நடுவில் அழகிய தீர்த்த ஸ்தலமாக விளங்குகிறது ஜடாயு தீர்த்தம்.

    மன்னர் ரகுநாத சேதுபதி காலத்தில் தான் இங்கு சிவன் கோவில் கட்டப்பட்டது. தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடதுபக்கம் அடர்ந்த காட்டிற்குள் இக்கோவில் இருப்பதால் இங்கு  பக்தர்கள் அதிகம் வருவதில்லை.

    இந்த புனித தீர்த்தம் ராமாயண சரித்திர புகழ் பெற்றது. ராவணனை வதம் செய்து சீதாபிராட்டியை மீட்டு வரும் வழியில் கெந்தமாதன பர்வதத்தில் ஸ்ரீராமபிரான் தங்கினார். அந்த சமயம், தனது சடை முடியில் இருந்த அரக்கர்களின் ரத்தத்தை சுத்தம் செய்து நீராடியதால் பிரம்மகத்தி தோஷம் நீங்கப்பெற்ற தீர்த்தமாக விளங்குகிறது.

    ராமேஸ்வரத்திலிருந்து ஜடாயு தீர்த்தம் செல்வதற்கான கூகுள் மேப்:



    ராமபிரான் தனது ஜடாமுடிகளை சுத்தம் செய்ததால் இதற்கு ஜடாயு தீர்த்தம் என்கின்ற பெயர் வைக்கப்பட்டதாம். இங்கு 12 வருடத்திற்கு ஒருமுறை மகாமகம் நடக்கும். அப்போது பல லட்சக்கணக்கில் மக்கள் இங்கு குவிவதுண்டு.

    இவ்வளவு சிறப்புகளை பெற்ற தனுஷ்கோடி செல்லும் வழியில் இடதுபக்கம் ஒருகிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஜடாயு தீர்த்தத்தை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்வதுண்டு ஆனால் போதிய சாலை வசதி இல்லாத காரணத்தினால் கோயிலுக்கு செல்ல முடியாமல் திரும்பி செல்கின்றனர்.

    பண்ணிரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் திருவிழாவிற்கு மட்டும் இங்கு சாலையை சரிசெய்து பக்தர்கள் குவிகின்றனர். மற்ற நாட்களில் யாரும் செல்ல முடிவதில்லை என்பது பக்தர்களுக்கு மனக்குறையாகவே உள்ளது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி