மதுரைக்கு மல்லி ஃபேமஷ்னா அந்த மல்லி செடியே தங்கச்சிமடம் பேய்கரும்பு கிராமத்துல இருந்து தான் போகுது. மதுரையில் இருந்து மகாராஷ்டிரா வரை பறக்கும் பேய்கரும்பு மல்லிகை பூ செடியின் மகத்துவம் பற்றித் தெரிந்துகொள்வோம்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மெய்யம்புளி பகுதியில் இருந்து அக்காள் மடம் பகுதி வரையிலும் அதாவது தங்கச்சிமடம், பேய்கரும்பு, அரியான்கொண்டு தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிகள் மற்றும் அக்காள் மடம் இந்த பகுதியில் வாழக்கூடிய மக்கள் தனது தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை வளர்த்தும், மல்லிகை பூ சீசன் வரும் நேரத்தில் மல்லிகை பூக்களை விற்றும் நர்சரி கார்டன் அமைச்சு விவசாயம் மாதிரி செஞ்சுக்கிட்டு இருக்காங்க.
ராமநாதபுரம் மாவட்டத்திலே மல்லிகை பூ-னா அது தங்கச்சிமடம் பூவு தான் விசேஷங்கள். கோவில் திருவிழாக்கள்ள இங்க தான் வாங்குவாங்க. இங்க இருக்கிற கடல் பகுதியில் உள்ள ஆற்றுகுறுத்து மணல் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் கிடையாதாம்.
இதுனால தான் மல்லிகை இங்க நல்லா வளரும் தன்மை கொண்டதால் இங்கு செடிகள் வளர்த்து மதுரை முதல் மகாராஷ்டிரா வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மூன்று மாதச்செடிளில் இருந்து ஏற்றுமதி செய்கின்றனர். அதன் பிறகு செடி இந்த மண்ணில் இருந்து எடுத்து சென்று எந்த மண்ணில் வேண்டுமானாலும் வைக்கும் தன்மை உடையதா மாறிவிடுகிறது.
இந்த தொழில் இரண்டு ஏக்கரில் செய்து வருபவர் தான் பேய்கரும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்கிற பட்டதாரி இளைஞர் மற்றும் அவரது சகோதரர்கள்.
மல்லிகை செடி வளர்ப்பு குறித்து பேசிய அவர், ‘மல்லிகை பூ செடியில் இருந்து கிளைகாம்புகள் உடைக்கப்பட்டு, கடல் பகுதி அருகில் உள்ளதால் இங்கு நல்ல ஆற்றுமணல் போன்ற குருத்தல் மண் உள்ளது. இந்த மண்ணானது இந்தியாவில் எந்த பகுதியிலும் கிடையாது. ராமேஸ்வரம் தீவிற்குள் கடல் மண் மட்டும் இருப்பதாக நினைக்கின்றனர். இந்த கடலினால் நமக்கு இப்படியொரு குருத்தல் மண் உள்ளது.
இந்த தொழிலை எங்களது அப்பாவோட தாத்தா காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக செய்துட்டு வரோம். மல்லிகைச் செடியில் இருந்து கிளையை உடைத்து மண்ணில் நடுவோம். இந்த செடி வைத்து மூன்று மாதம் வரை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
அதிக வெயில், மழை, பனியை தாங்கும் தன்மை கிடையாது. இதனால் உடனே வாடிவிடும், அதற்காகத் தான் தென்னங்கூரைகள் வைத்து சுற்றி அடைத்து மூன்று மாதங்கள் வரை பக்குவமாக பாதுகாப்போம். அதன் பிறகு தினமும் போதிய தண்ணீர் மட்டும் விட்டால் போதும் நன்றாக வளரும்.
மூன்று மாதங்கள் வெள்ளை கொசுவின் தாக்கம் இருக்கும். அதற்கு மட்டும் ரசாயணம் தெளிக்கப்படுகிறது. இதன் பிறகு வளர்ந்த செடிகளை நாற்றுகளாக மதுரை மற்றும் தமிழ்நாடு, வெளிமாவட்டங்களில் இருந்து வாங்கி செல்கின்றனர்.
மூன்று மாத செடி என்றால் அதன் தன்மைக்கேற்ப ஒரு செடி மூன்று ரூபாயில் இருந்து ஜந்து ரூபாய் வரை விற்க்கப்படுகிறது. சிலர் ஆறு மாத செடியாகவும் சிலர் ஒருவருட செடி கேப்பாங்க. ஒரு கட்டில் 100 செடிகள் வைத்து ரூ. 300லிருந்தது ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு மல்லிகை பூ நாற்றை ஆர்டர் செய்வார்கள். நாங்கள் பேருந்து அல்லது ரயில் மூலம் அவர்களது முகவரிக்கு அனுப்பி வைப்போம் என்றனர். ஏற்றுமதி செய்யும்போது தண்ணீர் மண் வைத்து பனை ஓலை பெட்டியில் பாதுகாப்பாத வைப்பதால் ஜந்து நாட்கள் வரை செடிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் ஆர்டர் செய்தவர்களின் கைக்கு சென்றுவிடும் என்கின்றனர்.
மல்லிகை பூ செடி நடவு செய்வதற்கு மட்டுமே 20 நபர்கள் தேவைப்படுகின்றனர். அதனை பராமரிக்க 5 நபர்கள் போதும் என்கின்றனர். நாற்று வளர்ப்புக்கு தண்ணீர் மட்டும் முதல் தேவை, தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத இடம் என்பதால் எந்தவொரு பாதிப்பும் இல்லையாம். இதன் ஆயுட்காலம் 20 வருடம் வரை ஜந்து, ஆறு அடி அளவிற்கு வளருமாம்.
ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மல்லிகைச் செடி நாற்றுகளை வாங்கிக் கொண்டுதான் மதுரையில் வைத்து வளர்த்து மல்லிகை பூ விற்கின்றனர். மதுரை கிடையாது மல்லிகை பூ-க்கு ஃபேமஸ், தங்கச்சிமடம் தான் மல்லிகை பூ- க்கு ஃபேமஸ்’ என்கிறார் பட்டதாரி இளைஞர் பிரகாஷ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram