Home /ramanathapuram /

50 ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி.. வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கியது..

50 ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி.. வாடிவாசல் அமைக்கும் பணி தொடங்கியது..

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Ramanathapuram District: 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ராமநாதபுரத்தை அடுத்த பொக்காரனேந்தல் கிராமத்தில் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வருகிற 25-ஆம் தேதி திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவுள்ள நிலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கும் பணி துவங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 800 காளைகள் பங்கேற்க உள்ளன.

    ராமநாதபுரத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி, வருகிற மே 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வாடிவாசல் அமைக்கும் பணியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ராமநாதபுரத்தை அடுத்த பொக்காரனேந்தல் கிராமத்தில் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.

    வாடிவாசல் அமைக்கும் பணி தொடக்கம்


    இதில் தமிழகத்திலுள்ள முக்கியமான நகரங்களில் இருந்து தலைசிறந்த 800 காளைகள் பங்கேற்க இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்காக பிரம்மாண்ட மைதானம் தேர்வு செய்யப்பட்டு இன்று வாடிவாசல் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

    இதையடுத்து, வாடிவாசல் அமைக்கும் பணியை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி