முகப்பு /ராமநாதபுரம் /

பழைய ஓய்வூதிய திட்டம்... ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்..!

பழைய ஓய்வூதிய திட்டம்... ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்..!

X
ஜாக்டோ

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம்

Ramanathapuram | ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று‌‌ வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் போன்றவை போராட்டத்தின் கோரிக்கைகளாக வைக்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டமானது நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Jacto, Local News, Ramanathapuram