Home /ramanathapuram /

ராமநாதபுரத்தில் ஐ.டி.ஐயில் சேர கால அவகாசம் நீட்டிப்பு- இறுதிநாள் என்ன?

ராமநாதபுரத்தில் ஐ.டி.ஐயில் சேர கால அவகாசம் நீட்டிப்பு- இறுதிநாள் என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமநாதபுரத்தில் ஐ.டி.ஐ படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவா்கள் சோ்க்கைக்கான கால அவகாசம் வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் ஐடிஐக்களில் சேர மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி மற்றும் பல்வவேறு சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. ஏராளமான நலத்திட்டங்களையும் அவர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது மாணவர் சேர்கையும் அறிவித்துள்ளது.

இந்த ஐடிஐ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 8ம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.

14 வயது முதல் 40 வயது வரையில் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும், அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

பெண்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு வயது வரம்பில்லை. பயிற்சிகளில் சேர விரும்புவோா் மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்று, சாதிச்சான்று, ஆதாா் அட்டை மற்றும் மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தொழிற்பயிற்சி மையங்களுக்கு நேரில் சென்று சோ்ந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை செப். 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பரமக்குடி அரசு தொழிற்பயிற்சிமைய முதல்வா் குமரவேல் தெரிவித்துள்ளாா்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி