முகப்பு /ராமநாதபுரம் /

மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை- கிராம கோவில் பூசாரிகள் உண்ணாவிரத போராட்டம் முடிவு

மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கை- கிராம கோவில் பூசாரிகள் உண்ணாவிரத போராட்டம் முடிவு

X
கிராம

கிராம கோவில் பூசாரிகள்

Ramanathapuram | ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கிராம பூசாரிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rameswaram, India

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராம கோவில் பூசாரிகளின் பொதுக்கூட்டத்தில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள கோசுவாமி மடத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை, பூ கட்டுவோர் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவையினர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் பூசாரிகளின் நிர்வாக பேரவை அறங்காவலர் எஸ். வேதாந்தம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டம் ஞாயிறுக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றதில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற மார்ச் 31-ம் தேதி அனைத்து மாவட்டத்தின் தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டத்தில் பூசாரிகள்

இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தின்‌ முக்கிய கோரிக்கைகளாக கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ.10, 000 வழங்க வேண்டும், பூசாரிகளின் நலவாரியம் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வூதியம் பெரும் பூசாரியின் மறைவுக்குப் பின் அவரது மனைவிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளனர்.

மேலும், ஓய்வூதியம் பெற ஆண்டு வருமானம் 72,000 ரூபாய் என்பதை 1,00,000 ரூபாயாக வழங்க வேண்டும், சிறுபான்மை கோவில்களுக்கு மின்கட்டணம் குறைவாகவும், கிராம கோவில்களுக்கு கட்டணம் அதிகமாகவும் இருப்பதால் கட்டணத்தை குறைக்கவேண்டும், என்ற கோரிக்கைகளையும் முன்னெடுத்து கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram