முகப்பு /ராமநாதபுரம் /

‘மதுரை மல்லியைவிட தங்கச்சிமடம் மல்லிக்குதான் மவுசு அதிகம்?’ - பெருமிதம் கொள்ளும் ராமநாதபுரம் விவசாயி!

‘மதுரை மல்லியைவிட தங்கச்சிமடம் மல்லிக்குதான் மவுசு அதிகம்?’ - பெருமிதம் கொள்ளும் ராமநாதபுரம் விவசாயி!

X
மாதிரி

மாதிரி படம்

Thangachimadam Jasmine : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பேய்கரும்பில் பகுதியில் மல்லிகை பூ சீசன் தொடங்கியுள்ளது. மல்லிகை பூவில் குறைந்த செலவில் அதிகம் லாபம் பார்க்கலாம் என்கின்றனர் விவசாயிகள்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம், பேய்கரும்பு மற்றும் அக்காள்மடம் ஆகிய‌ பகுதிகளில் ஏக்கர் கணக்கில் மல்லிகை செடி நர்சரி ஹார்டன்கள் வைத்து குடும்பம் குடும்பமாக வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்த்து வரும் ஒரு நர்சரி கார்டன், இரண்டு ஏக்கர் அளவில் மல்லிகை செடிகள் வளர்த்து, அதிலிருந்து கிடைக்கும் பூக்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

மல்லிகை பூ என்றால் மதுரை தான் ஃபேமஸ் என்று கூறுகிறார்கள், அதற்கு காரணம் அதன் மனமும், மற்ற ஊர் பூக்களைவிட அளவில் பெரியதாகவும் இருப்பதுதான். எனவேதான் மதுரை மல்லிக்கு தனிச்சிறப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட மதுரைக்கே தங்கச்சிமடம் பகுதியில் இருந்துதான் மல்லிகை தாய்செடி நாற்றுகளை வாங்கி சென்று தோட்டத்தில் நட்டு வைக்கின்றனர் என்றும், அந்த வகையில், மதுரை மல்லியின் புகழுக்கு அடித்தளமாக இருப்பது ராமநாதபுரம் பகுதி என்றும், சந்தையில் நம்ம மல்லிக்கு தான் மவுசு அதிகம் என்றும் கூறுகின்றனர் நர்சரி கார்டன் வைத்துள்ளவர்கள்.

இதையும் படிங்க : பொம்மன் - பெள்ளி பராமரித்த குட்டி யானை உயிரிழப்பு... பொதுமக்கள் சோகம்...!

மற்ற பூக்களை விட இந்த மல்லிகை பூவில் அதிக லாபம் பார்க்கலாம் என்று கூறும் அவர்கள், இங்குள்ள மண்ணில் செடிகள் நான்றாக வளர்ந்து பூ பூக்கும் என்றும் அது நல்ல மணமாகவும் இருப்பதால் இங்கு குடும்பம் குடும்பமாக இந்த தொழில் செய்வதாக சொல்லப்படுகிறது. தற்போது, மல்லிகை செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளது. கார்த்திகை, மார்கழி மாதம் மட்டும் பனியில் பூ பூப்பதில்லை. மற்ற மாதத்தில் நன்றாக பூக்கள் பூக்கும் என்றம் மல்லிகை செடியுடன் சேர்த்து மல்லிகை பூ அதிகளவில் விற்க்கப்டுவதாகவும் சொல்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதற்கு பராமரிப்பு என்பது மிகவும் குறைவு, செடிகள் வைக்கும்போது பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்கள் வைத்து செடியை நடவு செய்ய வேண்டும், இரண்டு வேளை தண்ணீர் பாய்ச்சினால் போதும், செடிகள் வளர்ந்து ஒரு மாதத்திலேயே பூக்கள் பூக்க தொடங்கி விடும்.

பூக்கள் அனைத்து தினந்தோறும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பூக்கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், வெளியூரில் இருந்து தொடர்புகொணடு விஷேசங்களுக்கு ஆர்டர் செய்பவர்களுக்கு பேருந்து அல்லது ரயில் மூலமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். இதன் விலை சாதாரண நாட்களில் ரூ.600 வரையிலும், விஷேச நாட்களில் ரூ. 3000 வரையிலும் விற்பனை ஆகிறதாம். குறைந்தபட்ச ஒரு நாளைக்கு 10-கிலோ முதல் 15 கிலோ வரை பூ பரித்து விற்க்கப்டுகிறதாக கூறுகின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram