முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடியில் போதையில் இளைஞர்கள் செய்த அட்டகாசம்.. தெளிந்த பின் சிறையில் அடைப்பு!

பரமக்குடியில் போதையில் இளைஞர்கள் செய்த அட்டகாசம்.. தெளிந்த பின் சிறையில் அடைப்பு!

X
பேருந்து

பேருந்து கண்ணாடியை சேதம் செய்த இளைஞர்கள்

Paramakudi | பரமக்குடி அருகே மது போதையில் பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Paramakudi, India

பரமக்குடி அருகே போதையில் அரசு பேருந்து மீது மதுபாட்டிலை வீசி பேருந்தின்‌ முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடி பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து வந்தது. அப்போது மேலகாவனூர் அருகில் பேருந்து வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பேருந்தின் மீது மதுபாட்டிலை வீசியுள்ளனர்.

இந்நிலையில், மது பாட்டில் வீசியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து, பரமக்குடி டவுன் காவல்துறையினர் விசாரணை செய்து கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் மேலத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர்.

இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையில் கைது இரண்டு செய்யப்பட்ட இளைஞர்கள் மது போதையில் பாட்டில்களை வீசி பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டு நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Drunken Son, Local News, Ramanathapuram