8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடலில் மிதந்தபடி, ஜல யோகாசனம் செய்து அக்னி தீர்த்த கடற்கரையில் ஜந்து வகையான யோகாசனம் மேற்கொண்டனர்.
8வது சர்வதேச யோகா தினம் நாளை (21.06.2022) கொண்டாடப்பட உள்ள நிலையில் உலகமெங்கிலும் அதற்கான நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் 9ம் வகுப்பு பயிலும் 14 வயதுடைய திவாகர் என்கிற மாணவனும் 62 வயதுடைய சுடலை என்கிற தொழில் அதிபரும் கடலுக்குள் சென்றனர். முதலில் ஐந்து வகையான ஆசனங்களை மேற்கொண்டனர். பின்பு சிவன் சிலையை நெஞ்சில் வைத்து கடலில் மிதந்தபடி ஜல யோகாசனம் செய்தனர், இதனை சுற்றுலா பயணிகள் பலர் கண்டுகளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கொரோனா தோற்று போன்ற தொற்றுகளில் இருந்து உலகை பாதுகாக்க யோகா போன்ற பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் கொரோனாவை எதிர்ப்பதற்கான எதிர்ப்பு சக்தியை யோகா செய்வதால் நமக்கு கிடைக்கும்.
கொரோனா தொற்று அதிகரிப்பதாக தொலைக்காட்சி மற்றும் செய்திகளில் பார்த்துக்கொண்டு வருகிறோம் அதனால் "வருமுன் காப்போம்" என்று எதிர்ப்பு சக்தியை யோகா செய்வதன் மூலம் அதிகப்படுத்திக் கொண்டு பாதுகாத்துக் கொள்வோம் என்று கூறினர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.