ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்திலுள்ள மக்கள் அங்காடியை ஆய்வு செய்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர்

ராமேஸ்வரத்திலுள்ள மக்கள் அங்காடியை ஆய்வு செய்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர்

அதிகாரிகள்

அதிகாரிகள் ஆய்வு

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலுள்ள மக்கள் அங்காடியில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்சு பாண்டே ஆய்வு செய்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நியாய விலை கடை மற்றும் மக்கள் அங்காடிகளை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்சு பாண்டே ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாரதிநகர் அருகே அமைந்துள்ள மக்கள் அங்காடிக்கு இன்று நேரில் சென்ற உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பொருட்கள் கையிருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் குறைந்த மழைப்பொழிவு பெறும் மாவட்டம் என்பதால் இந்த மாவட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருள் உற்பத்தி குறைந்த அளவில் உள்ளது. எனவே நியாய விலை கடைகள் மற்றும் மக்கள் அங்காடிகளில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் கையிருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வில் ஈடுபட்ட அதிகாரி

நியாய விலை கடைகளில் விற்பனை செய்யும் அரிசி, சர்க்கரை, எண்ணெய், கோதுமை போன்ற பொருட்கள் அனைத்தும் தரமான, மானிய விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

ஆய்வில் ஈடுபட்ட அதிகாரி

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வின் அடிப்படையில் கூட்டுறவு கடைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு போதுமான அளவு அத்தியாவசிய உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நியாய விலை கடைகளில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் குறைகள் குறித்து 1967 என்ற என்னை தொடர்பு கொண்டு மக்கள் புகார் அளிக்கலாம். மக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், நியாயவிலைக் கடைகளில் மக்கள் விரும்பும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும், விருப்பம் இல்லாத பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram