ஹோம் /ராமநாதபுரம் /

பீச்சில் சங்கு மேல் பெயர் பொறித்து வாங்கி இருக்கீங்களா... அவங்க வாழ்க்கையை கேளுங்க...

பீச்சில் சங்கு மேல் பெயர் பொறித்து வாங்கி இருக்கீங்களா... அவங்க வாழ்க்கையை கேளுங்க...

நலிவடைந்து

நலிவடைந்து வரும் சங்குகளில் பெயர் பொறிக்கும் தொழில்...

Rameshwaram | ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியின் திருக்கோவில் நான்கு ரத வீதிகளிலும் ஏராளமான சங்கு கடைகள் உள்ளன. இந்த சங்கு கடைகளில் சங்குகளில் பெயர் எழுதி கொடுக்கும் சிறு தொழில் மிகவும் நலிவடைந்ததாக சாலையோர வியாபாரிகளாக உள்ள சங்கு வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியின் திருக்கோவில் நான்கு ரத வீதிகளிலும் ஏராளமான சங்கு கடைகள் உள்ளன. இந்த சங்கு கடைகளில் சங்குகளில் பெயர் எழுதி கொடுக்கும் சிறு தொழில் மிகவும் நலிவடைந்ததாக சாலையோர வியாபாரிகளாக உள்ள சங்கு வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆன்மிக தலம் என்பதால் இங்கே தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு வரும் பக்தர்கள் அனைத்து ஆன்மீக தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு சென்று அனைத்தையும் கண்டுகளித்து விட்டு இங்கு வந்ததற்கு நினைவாக பிரசாதங்கள், சங்கு, முத்து பாசினால் ஆன பொருட்கள் வாங்கிச் சென்று தனது வீடுகளிலும் பூஜை அறைகளிலும் வைப்பது ஐதீமாக நினைக்கின்றனர்.

இதையும் படிங்க : தனுஷ்கோடிக்கு சுற்றுலா போறீங்களா..! மறக்காம இதை எல்லாம் பார்த்துட்டு வாங்க..!

இந்நிலையில், சங்கு வியாபாரத்தில் மிக முக்கிய தொழில் தான் சங்குகளில் பெயர் எழுதி கொடுப்பது. இந்த தொழிலானது கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 70 பேர் கிழக்கு ரதவீதியிலும், 75 பேர் பேருந்து நிலையம் பகுதிகளும் தொழில் செய்து வந்துள்ளனர். தற்போது 30 பேர் மட்டுமே தொழில் செய்கின்றனர். அதில் இரண்டு பேர் மட்டுமே பெயர் எழுதும் தொழிலில் உள்ளனர்.

இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்ததற்கான நினைவிற்காக சங்குகளில் தங்களது பெயர் அல்லது அப்பா, அம்மா கணவன், மனைவி, குழந்தைகள் ஆகியோரின் பெயர் எழுதி அதில் வந்த தேதியினை குறிப்பிட்டு வாங்கி செல்வார்கள்.

இந்த தொழிலானது மிகவும் எளிதான தொழில் கிடையாது. சங்கில் பெயர் எழுதுவதற்கு முதலில் பெயிண்டில் பெயர் எழுதுவர். பின்பு அதில் ராமநாதசுவாமி கோவில் கோபுரம் அல்லது சிவலிங்கம் மற்றும் பக்தர்கள் கேட்கும் வரைபடத்தை வரைவது மிகவும் கடினமான ஒன்று.

இவ்வாறு பெயர் மற்றும் படங்கள் வரைந்த பிறகு அதனை ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டில் முக்கி எடுப்பர். இந்த ஆசிட்டில் முக்கி எடுப்பதால் சங்கினுடைய வண்ணம் மாறி, அதில் வரைந்த எழுத்துக்களில் மட்டுமே சங்கினுடைய நிறம் இருக்கும். மற்ற பகுதி வெள்ளையாக மாறிவிடும்.

இதையும் படிங்க : ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை இந்தியாவின் முக்கிய சிவாலயங்கள் இதோ..!

ஒரு சங்கை குறைந்தபட்சம் மூன்று முறையாவது ஆசிட்டில் முக்கி எடுப்பார்கள். இவ்வாறு ஐந்து முறை எடுத்தாலே கை வெந்துவிடும். இதனையும் பொருட்படுத்தாமல் வேதனையை தாங்கிக்கொண்டு தொழில் செய்து வருகின்றனர் சங்கு வியாபாரிகள்.

கவடா, விரஞ்சான், வெட்டுச்சங்கு என ஜந்து வகையான சங்குகள் உள்ளது. 10 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மிகவும் கடினமான இந்த தொழிலை சிறுவயதிலிருந்து செய்து வருவதால் இந்த தொழிலை விட்டு போக மனதில்லாமல் இந்த தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர் சங்கு வியாபாரம் செய்பவர்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் சாலையோர வியாபாரிகளாக சங்கு வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் சார்பாக கோரிக்கை வைக்கின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram