முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட நீதிமன்ற கட்டடம் திறப்பு!

பரமக்குடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட நீதிமன்ற கட்டடம் திறப்பு!

X
பரமக்குடியில்மரபுசார்

பரமக்குடியில்மரபுசார் நீதிமன்றம்

Ramanathapuram District | பரமக்குடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் இருந்த மரபுசார் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார். 

  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் இருந்த மரபுசார் நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றமானது தமிழகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கட்டடம் என்பதால் முற்றிலும் பழுதடைந்தது. இந்நிலையில் நீதிமன்றமானது புதிய கட்டடங்களில் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகிய மூன்று நீதிமன்றங்கள் தலா ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டன.

இந்த மூன்று நீதிமன்றங்களும் பழமைமாறாமல் அதே நிலையில் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்டு மற்ற இரண்டு நீதிமன்றமும் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் பரமக்குடியில் மரபுசார் நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, மரபு வழி நீதிமன்றத்தின் கட்டுமான அமைப்புகள், நீதிமன்ற அறைகள், குற்றவாளி கூண்டுகள் ஆகியவை குறித்து நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

First published: