ஹோம் /ராமநாதபுரம் /

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் மீனவர்கள் மரியாதை

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் மீனவர்கள் மரியாதை

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

Ramanathapuram District News : 2004-ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை சுனாமியில் தமிழகத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் கடலில் மலர்தூவி ஏராளமானோர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

2004-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்திரா தீவு கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கடல் அலை கொந்தளிப்பு ஏற்பட்டு சுனாமியாக மாறியது.

இந்த கோர அலையின் சுனாமி தாக்கத்தால் இந்தியா மற்றும் இலங்கையின் கடல் பகுதியில் பொருட்சேதத்துடன் அதிகளவு உயிர்சேதம் ஏற்பட்டது. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் கேரளாவை தாக்கியதில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில், தமிழகத்தில் கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சென்னை ஆகிய கடலோர மாவட்டங்களில் தாக்கியதில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சுனாமி அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

இதையும் படிங்க : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு

இதன் நினைவாக தமிழகத்தில் உள்ள கடலோரப் கிராம பகுதிகளில் 18-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் தமிழ்நாடு மீனவர் பேரவையின் சார்பாக கடலில் மலர்தூவி பால் ஊற்றி ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : மனோஜ்குமார் - ராமநாதபுரம்

First published:

Tags: Local News, Ramanathapuram