முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் கடித்து குதறிய வெறிநாய்கள்.. 68 ஆடுகள் பலியான சோகம்!

ராமநாதபுரத்தில் கடித்து குதறிய வெறிநாய்கள்.. 68 ஆடுகள் பலியான சோகம்!

X
பலியான

பலியான ஆடுகள்

Ramanathapuram | ராமநாதபுரம் அடுத்த முடுக்குத்தரவை கிராமத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம் அடுத்த முடுக்குத்தரவை கிராமத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை வெறி நாய்கள் கடித்ததில் ஜந்து லட்சம் மதிப்புடைய 68 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே வைரவன் கோவில் அடுத்த முடுக்குத்தரவை கிராமத்தை சேர்ந்த தினகரன் என்ற விவசாயி சுமார் 200-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வாழ்வாதாரம் பெற்று வருகிறார். இந்நிலையில், முடுக்குத்தரவையில் உள்ள தென்னந்தோப்பில் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்துள்ளனர், அப்போது நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் கூட்டமாக வந்து பட்டிக்குள் நுழைந்து ஆடுகள் அனைத்தையும் கடித்துள்ளது.

இதையடுத்து, ஆடுகள் கத்தும் சத்தத்தை கேட்டு விவசாயி தினகரன் மற்றும் அருகில் உள்ளவர்கள் வந்து வெறி நாய்களை விரட்டினர். இதில் நாய்கள் கடித்ததில் 68 ஆடுகள் மற்றும் ஆட்டுகுட்டிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயங்களுடன் கவலை கிடமாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவ குழுவினர் உயிருக்கு போராடும் ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ரூபாய் இருக்கும் என்று ஆடுகளின் உரிமையாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Dog, Local News, Ramanathapuram