ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உலக பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோயில் காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகும். இந்த ஸ்தலம் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையது. இங்கு தங்களது மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், இங்கு வந்தால் மிக முக்கியமான 2 பரிகாரங்கள் செய்தால் நல்லது என்று ராமேஸ்வரத்தில் உள்ள புரோகிதர்கள் கூறுகின்றனர். தங்களது குடும்பத்தில் உள்ள ஒருவர் துர்மரணம் (இயற்கையாக இல்லாத மரணம்) என்று சொல்லக்கூடிய மரணம் அடைந்திருந்தால் அவர்களை நினைத்து "திலஹோமம்" என்ற மிகப்பெரிய பரிகாரத்தை இந்த புண்ணிய ஸ்தலத்தில் செய்ய வேண்டும் என்கின்றனர்.
இவ்வாறு செய்தால் அவர்களுக்கு நல்லகதி கிடைப்பதோடு மட்டுமின்றி நம்முடைய வம்சமும் அபிவிர்த்தி அடையும் என்கின்றனர். 2வது பரிகாரம் தம்பதிகளுக்கு குழந்தைகள் பாக்கியம் இல்லை என்றால் சந்தானபிராப்தி என்ற பரிகாரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள அனைத்து தீர்த்தங்களிலும் புனித நீராடி விட்டு தம்பதிகளை வைத்து சர்பசாந்தி, நாகபிரதிஷ்டை என்ற 2 பூஜைகளை செய்தால் நிச்சயமாக நல்லது நடக்குமாம்.
ராமநாதசுவாமி கோயிலுக்குள் நடராஜர் சன்னதி பின்னால் ரிஷிமகான் தியானம் செய்தவாறு இருப்பார், அங்கு அவர் அவ்வாறு இருப்பது பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி தியானம் செய்கிறார் என்று கூறுகின்றனர். இதுபோன்ற அனைத்து காரியங்களும் செய்தால் அனைத்து விதத்திலும் பரிகாரங்கள் கிடைக்கும், இதன் தொடர்ச்சியாக ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாளை பூர்த்தியாக வழிபட்டால் அனைத்து நீங்கி நன்மை பயக்கும் என்று புரோகிதர் சுந்தரவாத்தியார் கூறுகிறார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram, Rameshwaram