ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram | மீன்களைப் பாதுகாக்க உதவும் ஐஸ்கட்டிகள் எப்படி தயாராகின்றன? - ஐஸ் ஃபேக்டரி விசிட்

Ramanathapuram | மீன்களைப் பாதுகாக்க உதவும் ஐஸ்கட்டிகள் எப்படி தயாராகின்றன? - ஐஸ் ஃபேக்டரி விசிட்

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் ஐஸ் கட்டி தயாரிப்பு

Ramanathapuram ice factory | ராமேஸ்வரத்தில் மீன்பிடித் தொழிலைப் போலவே ஐஸ் கட்டித் தயாரிக்கும் தொழிலும் முக்கியத் தொழிலாக உள்ளது. பலரும் இந்தத் தொழிலை நம்பி உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

மீன்களை கடலில் இருந்து பிடித்து வரும்போது கெட்டுப் போகாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் எப்படி உருவாகிறது. ஐஸ் கட்டிகளை உருவாக்க என்னலாம் செய்ராங்க என்பதை தெரிந்துகொள்வோம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழிலே மீன்பிடி தொழில் தான். இந்த தொழிலில் ஐஸ் கட்டிகளுக்கு முக்கியமான பங்கு இருக்கு. ஆழ்கடலில் மீன்களை பிடிக்கும் மீனவர்கள் அதை கரைக்கு கெட்டுப்போகாமல் கொண்டுவருவதற்கு ஐஸ் கட்டிகள் தான் முக்கிய காரணம்.

வெளியே செல்லும் ஐஸ் கட்டிகள்

இந்த காரணத்தினாலேயே ராமநாதபுரத்தில் மீன்பிடித் தொழில் போலவே ஐஸ் கட்டி தயாரிப்பு தொழிலும் பரபரப்பா இயங்கிக் கொண்டுவருகிறது. பாம்பன் துறைமுகம் அருகே உள்ளது மேரி மாதா ஐஸ் கட்டி ஆலை. இந்த ஆலை இங்க 12 வருஷமா இயங்கிவருகிறது.

தயாரிக்கப்பட்ட ஐஸ் கட்டி

ஐஸ்கட்டி தயாரிப்பு முறை குறித்து இந்த ஆலையோட ஓனர் பரிமளன் நமக்கு பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஜஸ்கட்டி உருவாவதற்கு 24 மணிநேரம் தேவைப்படுகிறது. இங்கு இரண்டு சிலிண்டர் உடைய கம்ப்ரசர் 50HP உள்ளது. இவங்க பழைய முறைப்படி தயாரிப்பதால் ஐஸ் கட்டிகள் உருவாக 24 மணி நேரம் ஆவதாகவும், தற்போது புதிய தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் வந்துள்ளதால் 20 மணி நேரத்திலேயே ஐஸ் கட்டிகளை தயாரிக்க முடியும் என்று சொல்கிறார் பரிமளன்.

உடைக்கப்பட்ட ஐஸ் கட்டிகள்

இந்த ஐஸ்கட்டி தயாரிப்பு முறையில் எந்த ஒரு ரசாயனமும் கலக்கறது கிடையாது. சுத்தமான நீரில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க சுத்தமான நீர் அவசியம் என்று விவரிக்கிறார் பரிமளன்.

ஐஸ் கட்டி தயாரிப்பு ஆலை

மொத்த வியாபாரிகளுக்கு 110 ரூபாய்க்கும், சில்லறையாக வாங்குபவர்களுக்கு 120 ரூபாய்க்கும் ஒரு ஐஸ் கட்டி விற்கப்படுகிறது. ஒரு ஜஸ் கட்டி 50 லிருந்து 60 கிலோ வரையிலும் எடை இருக்கும்.

விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க போறப்ப ஒரு நாளைக்கு 250 ஐஸ் கட்டிகள் விற்பனை ஆகுமாம். இதுவே நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க போறப்ப 100 லிருந்து 150 வரையிலும் ஐஸ்கட்டிகள் விற்பனையாகுமாம். மீன் பிடிக்க கடலுக்குள் போகும்போது, மீனவர்கள் வந்து ஐஸ் கட்டிகளை வாங்கிக் கொண்டு செல்வார்கள். அதன்பின்னர், மீன்களைப் பிடித்துவிட்டு கரைக்கு வந்த பிறகு அடுத்தநாள் மீன்களை விற்க வியாபாரிகள் வந்து ஐஸ் கட்டிகளை வாங்கிக் கொண்டு செல்வார்கள்.

மீன்பிடி தடைக்காலத்திலும் இந்த தொழிலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இயங்கும். ஏனென்றால் நாட்டு படகுகள் மீன்பிடிக்க தடையில்லாம செல்வதால் எந்தவொரு பாதிப்பும் ஐஸ் கம்பெனிகளுக்கு ஏற்படாது.

ஒவ்வொரு ஐஸ் கம்பெனியை நம்பியும் நிறைய பேரின் வாழ்வாதாரம் உள்ளது. தற்போது மின் கட்டண உயர்வால் இந்த ஐஸ் கம்பெனிகள் பாதிப்படைந்துள்ளன. ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் ஜஸ்கட்டிகளின் விலையை ஏற்றினாலும் மீனவர்களுக்கு தான் மறைமுகமான பாதிப்பு.

முன்னலாம் வாரத்திற்கு மூணு நாளு மீன் பிடிக்க போன மீனவர்கள், இப்பலாம் ஒரு நாள் மட்டும் தான் மீன் பிடிக்க போறாங்க. இதனால் இந்த ஐஸ் கட்டி கம்பெனிகளின் வணிகமும் கொஞ்சம் மந்தமாகத்தான்போயிட்டு இருக்குறதா சொல்றாங்க.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram