ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மீனவ பட்டதாரிகளுக்கு இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி - விண்ணப்பிக்கும் வழிமுறை

ராமநாதபுரம் மீனவ பட்டதாரிகளுக்கு இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி - விண்ணப்பிக்கும் வழிமுறை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Free IAS Training for Fishermen Children | ராமநாதபுரம் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ramanathapuram, India

  ராமநாதபுரம் மீனவ பட்டதாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். பயிற்சி வழங்குவது குறித்த விவரத்தை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் இணைந்து கடல், உள் நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்கள் 20 பேரை தேர்வு செய்து ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

  கடல், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள் இதில் பயனடையலாம். இதற்கு www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  Must Read :  அடடே... வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டதா! - விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

  மேலும், மண்டல, மாவட்ட மீன்வளம், மீனவர் நலத்துறை துணை இயக்குனர், உதவி இயக்குனர் அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பம் பெறலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு அஞ்சலிலோ அல்லது நேரடியாகவோ நவம்பர் 2ஆம் தேதிக்குள் மீன் வளத்துறை அலுவலத்தில்வழங்கலாம் என நாமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  அதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேரந்தவராக இருந்தால் வயது வரம்பு 35 வரையிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வயது வரம்பு 37 வரையிலும் மாற்றுத்திறனாளிகளின் வயது வரம்பு 42 வரையிலும் இருக்கலாம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Exam, Fishermen, Local News, Ramanathapuram