முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில்‌ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சுகாதார பயிற்சி..

ராமநாதபுரத்தில்‌ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சுகாதார பயிற்சி..

X
ராமநாதபுரத்தில்‌

ராமநாதபுரத்தில்‌ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சுகாதார பயிற்சி

Ramanathapuram News | ராமநாதபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் சுகாதார பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் ரெக்கிட் இந்தியா மற்றும் கிராமாலயா தொண்டு நிறுவனமும் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு சுகாதார கல்வி அளிக்கும் திட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் சுகாதார பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.

நாட்டின் தென்பகுதியில் உள்ள 6 மாநிலங்களில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் சிறுவர்களுக்கு ரெக்கிட் இந்தியா மற்றும் கிராமாலயா தொண்டு நிறுவனங்கள் இணைந்து சுகாதாரம் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, தமிழகத்தின் 10 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1200 அரசு பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரக் கல்வி அளிக்கும் திட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் சுகாதார பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் சுகாதார பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஒன்றியங்களைச் சேர்ந்த 53 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அப்போது, தூய்மைப் பள்ளி விருது பற்றி விளக்கப்பட்டதுடன் இதில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram