ஹோம் /ராமநாதபுரம் /

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மனித சங்கிலி போராட்டம் 

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மனித சங்கிலி போராட்டம் 

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மனித சங்கிலி

Ramanathapuram News | ராமேஸ்வரத்தில் மதநல்லிணக்க ஜனநாயக அமைப்புகள் சார்பில் 15- க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமேஸ்வரத்தில் மதநல்லிணக்க ஜனநாயக அமைப்புகள் சார்பில் 15-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 15-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர், இப்போராட்டத்தில் கட்சி தொண்டர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டமானது சிபிஎம், சிபிஐ, திக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தவாக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக நடைபெற்றது.

இதையும் படிங்க : ராணுவ கல்லூரியில் சேர விருப்பமா? -  ராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

இதையடுத்து, ராமேஸ்வரத்தில் மதநல்லிணக்க ஜனநாயக அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சி.பி.எம், சி.பி.ஐ, தி.க, காங்கிரஸ், மதிமுக, விசிக, தவாக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இணைந்து மாலை 5 மணிக்கு திட்டக்குடி முதல் மேலத்தெரு வரை மனித சங்கிலியாக கைகள் கோர்த்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, தொடர்ந்து 1 மணி நேரம் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கட்சி தொண்டர்கள், பெண்கள் உட்பட 300-க்கும்‌ மேற்பட்டோர் கலந்துகொண்டு சமூக நல்லிணக்கத்திற்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram