ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைகளை வறட்சியில் இருந்து பாதுகாப்பது எப்படி?

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விதைகளை வறட்சியில் இருந்து பாதுகாப்பது எப்படி?

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

How To Easily Protect Rice Seeds From Drought In Ramanathapuram District | நெல் விதைகளை பொட்டாஷ் விதை கடினப் படுத்துதல்  செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதன் மூலம் பொட்டாஷ் நேர்த்தி செய்த விதைகளை உடனே விதைக்க இயலாத சூழ்நிலையில் ஒரு மாத காலம் வரை வைத்திருந்து விதைக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

நெல் விதைகளை பொட்டாஷ் விதை கடினப்படுத்துதல் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதன் மூலம் பொட்டாஷ் நேர்த்தி செய்த விதைகளை உடனே விதைக்க இயலாத சூழ்நிலையில் ஒரு மாத காலம் வரை வைத்திருந்து விதைக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்த முத்துவயல் கிராம பஞ்சாயத்து சின்ன இதம்பாடலில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் நெல் பொட்டாஷ் விதை கடினப்படுத்துதல் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இதையும் படிங்க ; ராமநாதபுரம் விவசாயிகளே... பிரதமர் நிதி கிடைக்க உடனே இதை செய்யுங்கள்

ஒரு ஏக்கருக்கு தேவையான நெல், 300 கிராம் பொட்டாஷ் உரத்தை 30 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் 30 கிலோ விதையை நன்கு கலக்கி 13-14 மணி நேரம் ஊறவைத்து, பின் நீரினை வடித்து 24 மணி நேரம் நிழலில் காய வைத்து பின் விதைக்க வேண்டும். பொட்டாஷ் நேர்த்தி செய்த விதைகளை உடனே விதைக்க இயலாத சூழ்நிலையில் ஒரு மாத காலம் வரை வைத்திருந்து விதைக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விதையை விதைப்பதால் பயிர் முளைத்து ஒரு மாத காலம் வரை மழையில்லா விட்டாலும் பயிரினை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம் என சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா விதை நேர்த்தி செய்து இடுவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram