ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் அரசின் மலிவு விலை தங்கும் விடுதி.. தனியார் விடுதிகளுக்கு போட்டியாக பல்வேறு வசதிகள்..

ராமேஸ்வரத்தில் அரசின் மலிவு விலை தங்கும் விடுதி.. தனியார் விடுதிகளுக்கு போட்டியாக பல்வேறு வசதிகள்..

ராமேஸ்வரத்தில்

ராமேஸ்வரத்தில் யாத்ரி நிவாஸ்

Rameshwaram Yatri Nivas : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மலிவு விலையில், தனியார் விடுதிகளுக்கு இணையான அறைகளை புக்கிங் செய்து தங்கிச் செல்லலாம்.. இது குறித்த ஒரு தொகுப்பை காணலாம்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ராமேஸ்வரத்தில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸ் விடுதியில் மலிவான கட்டணத்தில் ஏராளமான பக்தர்கள் வந்து தங்கி செல்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூ.30  கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் யாத்ரி நிவாஸ் அமைக்கப்பட்டது.

யாத்ரி நிவாஸ், ராமேஸ்வரம்

பக்தர்கள் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதியில் தங்கி செல்வதற்காக இது அமைக்கப்பட்டுள்ளது, தனியார் தங்கும் விடுதிகளை விட இங்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக உள்ளது.

யாத்ரி நிவாஸ், ராமேஸ்வரம்

இலவச பார்க்கிங் - ஓட்டுநர் தங்கும் அறை:

13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தங்கும் விடுதியானது முழுவதும் சிசிடிவி கேமரா கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது, இங்கு இலவச வாகனம் நிறுத்துமிடம், டிரைவர்களுக்கு இலவச தங்கும் அறையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்  2 பேர் முதல் 20 பேர் வரையிலும் ஒரே அறையில்  தங்கும் வகையில்அறை வசதிகளும் உண்டு. பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் விரைவில் உணவு விடுதி, சிறுவர் பூங்காவும் இங்கு அமைய உள்ளது.

யாத்ரி நிவாஸ், ராமேஸ்வரம்

இதையடுத்து, தங்கும் பக்தர்களுக்கு கோவில் பற்றிய வரலாறும் கூறப்பட்டு சுற்றி பார்க்கும் இடங்களையும் புகைப்படங்களாக கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டு கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வது குறித்தும் எடுத்துரைக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் ஆதரவும் பெருகிறது என்று கூறுகின்றனர்.

தங்கும் விடுதியின் கட்டணம்:-

இரண்டு படுக்கை அறை : 500

A/C உடன் இரண்டு படுக்கை அறை :750

6 படுக்கைகள் கொண்ட அறை : 1200

8 படுக்கைகள் கொண்ட அறை: 1600

2 படுக்கை அறை கொண்ட ஒரு அறை(A/C) :1000

2 படுக்கைகள் கொண்ட இரு அறை (A/C) : 1750

யாத்ரி நிவாஸ், ராமேஸ்வரம்

மொத்தம் 136 அறைகளைக் கொண்டுள்ளது, 100 இரண்டு படுக்கை அறைகளும், 12 ஆறு படுக்கை அறைகளும், 16 எட்டு படுக்கைகள் அறைகளும் உள்ளது.

இந்த யாத்ரி நிவாஸ்  தங்கும் விடுதியில் அறைகள் புக்கிங் செய்ய  விரும்பினால் 04573 290555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Yatri Nivas - Rameshwaram
யாத்ரி நிவாஸ் அமைவிடம்

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram