Home /ramanathapuram /

அரசு மானியத்தில் காய்கறி தோட்டம் அமைக்க விண்ணப்பிப்பது எப்படி? - தெரிந்துகொள்ளுங்கள்

அரசு மானியத்தில் காய்கறி தோட்டம் அமைக்க விண்ணப்பிப்பது எப்படி? - தெரிந்துகொள்ளுங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், அரசு காய்கறி தோட்டம் அமைக்கவும், அரசு மானியத்தில் உபகரணங்கள் பெறுவதற்கும் எப்படி விண்ணப்பிப்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

    ராமநாதபுரம் தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் காய்கறி பயிர்கள் செய்யும் பரப்பு விரிவாக்கம், நீர் ஆதாரத்தை பெருக்கிட விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைத்தல், சிப்பம் கட்டும் அறை கட்டுதல், குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், பவர் டில்லர் இயந்திரங்கள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    https://tnhorticulture.tn.gov. in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே மானிய திட்ட பயன்கள் வழங்கப்படும்.

    தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் நிரந்தர பந்தல் அமைத்தல், பண்ணைத் திட்டம் உள்ளது. மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் காய்கறி தோட்டம் ஊக்குவித்தல், வாழை பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி, தோட்டக்கலை கருவிகள், உபகரணங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    மேலும் விபரங்களுக்கு அருகேயுள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி