முகப்பு /ராமநாதபுரம் /

சுருக்குமடி வலை எப்படி பயன்படுத்தப்படுகிறது? ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பது ஏன்?

சுருக்குமடி வலை எப்படி பயன்படுத்தப்படுகிறது? ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பது ஏன்?

X
மீன்

மீன் வலை

Ramanathapuram | சுருக்குமடி வலைகள் பயன்படுத்துவதற்கு ஒரு தரப்பு மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. சுருக்குமடி வலைகள் பற்றி கேள்வி பட்டிருப்போம். சுருக்குமடி வலையென்றால் என்ன? அந்த சுருக்குமடி வலையை வைத்து எப்படி மீன்படிக்கிறார்கள்? அதை யார் பயன்படுத்துவார்கள் என்பதை பற்றி அறிந்துக்கொள்ளவோம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழிலே மீன்பிடி தொழில் தான். இங்கு விசைப்படகில் மீன்பிடிப்பது, நாட்டுப்படகில் மீன்பிடிப்பது, கரைவலையில் மீன்பிடிப்பது, தூண்டிலில் மீன்பிடிப்பது என பல்வேறு முறைகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இதில் சுருக்குமடி‌ வலையை‌ பயன்படுத்தி மீன்பிடிப்பது விலையுயர்ந்த நாட்டுப்படகுகளை வைத்துள்ள மீனவர்கள் மட்டுமே. இரண்டு நாட்டுபடகில், ஒரு நாட்டுப்படகு முழுவதும் வலையையும் மற்றொரு படகில் 10 மீனவர்கள் சென்று கடல் நீரோட்டத்தை பார்த்து, மீன்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் வலையை வீசி மீன்பிடிப்பார்கள்.

இந்த வலையின் விளிம்பில் அதிக எடையுள்ள இரும்பு குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை படிபடியாக கீழே சற்று தரைதட்டும் அளவிற்கு மூழ்கும். அப்போது சிறிய இடைவெளி மட்டும் இந்த வலையில் இருப்பதால் சிறிய மீன்கள், இறால்கள், அரியவகை உயிரினங்கள் மொத்தமாக வலையில் சிக்கும். பின் மீனவர்களின் கையில் உள்ள கயிற்றை வைத்து மீனை இழுப்பார்கள். இதனால் இந்த வலையை பயன்படுத்தி அதிகளவில் மீன்கள் பிடிக்க முடியும்.

படகின் கொள்ளவிற்கு மேல் மீன்களின் வரத்து வந்த பிறகு, சிறிய ரக மீன்களை கடலில் திரும்ப கொட்டுகின்றனர். இதில் முக்கால்வாசி மீன்கள் படகில் இருக்கும் போது இறந்துவிடும். இதனால் தான் இந்தவகை சுருக்குமடி மூலம் மீன்பிடிபிற்கு தமிழக அரசு தடை விதித்தது.

சுருக்குமடி வலையில் மீன்கள் அனைத்தும் மாட்டிக்கொள்வதால், சாதாரண வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும்‌ மீனவர்களுக்கு குறைந்தளவே மீன்கள் கிடைக்கின்றன. சுருக்குமடி‌ வலையானது 10 லட்ச ரூபாய் வரை விற்க்கப்படுகிறது.

இந்த சுருக்குமடி வலையை தமிழக அரசு ஏன் தடை செய்தது என்றால், படகில் உள்ள கொள்ளவை விட மீன்கள் அதிகமாக வலையில் சிக்கியபின் பெரிதாக உள்ள மீன்களை வைத்து கொண்டு சிறிய‌ மீன்களை கடலில் கொட்டுவதால் மீன்கள் இறந்து அழிந்து விடுகிறது.

தைப்பூச தெப்ப திருவிழா... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தீர்த்த கிணறுகளில் 5ம் தேதி நீராட அனுமதி இல்லை

இதனால் மீன் இனங்கள் விரைவில் அழிவதோடு மட்டுமில்லாமல், அரியவகை உயிரினங்கள் பவளப்பாறைகள், கடல் அட்டைகள் போன்றவை வலையில் சிக்கி அழிந்துவிடுகின்றன. இதனால் தான் தமிழ்நாட்டில் இந்த வலையை தடைசெய்யப்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram