முகப்பு /ராமநாதபுரம் /

திடீரென வீசிய சூறாவளி காற்று.. நெல்மடூர் கிராமத்தில் மரங்கள் விழுந்து 40 வீடுகள் சேதம்..

திடீரென வீசிய சூறாவளி காற்று.. நெல்மடூர் கிராமத்தில் மரங்கள் விழுந்து 40 வீடுகள் சேதம்..

X
மாதிரி

மாதிரி படம்

Paramakkudy Nelmatur village | பரமக்குடி அருகே நெல்மடூர் கிராமத்தில் இரவு திடீரென வீசிய சூறைக்காற்றால் மரங்கள் வோரோடு சாய்ந்து வீடுகளில் விழுந்ததில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அருகே உள்ள நெல்மடூர் கிராமத்தில் 130 வீடுகள் உள்ளன. நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்த போது சூறாவளி காற்றானது வீசியது.

இந்நிலையில், பலத்த சூறாவளி காற்று வீசியதில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வோரோடு சாய்ந்தும், கிளையோடு உடைந்தும் 40-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகளின் மீது விழுந்து வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் பலத்த சேதமடைந்தது.

சேதமான வீடுகள்

மேலும், மின்கம்பங்கள் இரண்டாக உடைந்தது சாய்ந்ததால் அப்பகுதியில் மின்சார துண்டிக்கப்பட்டுள்ளது‌, இதனால் அருகில் உள்ள 10 கிராமத்திற்கும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து, சூறாவளி காற்றால் சேதமடைந்த வீடுகளுக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram